பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

atom

104

attached document


இதன் உறுப்பினர்கள். தகவல் பரிமாற்றத்தில் ஒத்தியங்கா அனுப்பீட்டு முறையை முன்னேற்றுதல் இம்மன்றத்தின் குறிக்கோள்.

atom : ஆட்டம் : தரவு அமைப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படை அலகு. கோப்பில் உள்ள ஒரு ஏடு போன்றது. அதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகள் இருக்கலாம்.

atomic : அணுநிலை.

atomic indivisible : பகுக்க இயலா அணுத்தன்மையுள்ள : ஒரு அணுச் செயல் அணுத்தன்மை என்றால் ஒரு செயலை முழுவதுமாகச் செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். சான்றாக, எந்திரக் கோளாறின் காரணமாக, ஒரு பரிமாற்றம் முடிவது தடைபடுமானால், கணினி அமைப்பு அந்தப் பரிமாற்றம் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு மீண்டும் சென்று விடும்.

atomicity : அணுத்தன்மை : எதையும் எந்த அளவுக்குப் பகுக்கலாம் என்பதைக் கூறுவது.

atomic operation : அணுச் செயல்பாடு : மேலும் சிறிய செயல்களாகப் பகுக்க முடியாத செயல்.

attach : இணை : கணினி ஒன்றின் திறனைக் கூட்ட புறச் சாதனம் ஒன்றைச் சேர்த்தல்.

atomic resolution storage : அணு முறை சேமிப்பு.

attached document : உடனிணைக்கப்பட்ட ஆவணம் : ஒரு மின்னஞ்சல் செய்தியுடன் உடனிணைப்பாக அனுப்பி வைக்கப்படும் ஓர் ஆவணம். ஆஸ்கி உரைக் கோப்பு, இரும மொழிக் கோப்பு, ஒரு வரைகலைப் படக் கோப்பு, ஓர் இசைப் பாடல் கோப்பு, ஓர் ஒளிக் காட்சிக் கோப்பு, ஒரு மென்பொருள் தொகுப்பு இவற்றுள் எதை வேண்டுமானாலும் மின்னஞ்சல் செய்தியுடன் இணைத்து அனுப்ப முடியும். வேறு வேறு பயன்பாட்டுத் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஆவணங்களாக இருக்கலாம். இணைக்கப்படும் ஆவணங்கள் மின்னஞ்சல் செய்தியின் ஒரு பகுதியாகக் கருதப் படுவதில்லை. அவை மைம் (MIME), பின்ஹெக்ஸ் (BINHEX) என்ற முறையில் மாற்றுக் குறியீடாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரும்பாலான மின்னஞ்சல் தொகுப்புகள் தாமாகவே இம் மாற்றத்தை செய்து அனுப்பும் திறன் பெற்றுள்ளன. மின்னஞ்சலைப்