பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1050

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

optical recognition device

1049

optimizer


optical recognition device : ஒளியியல் ஏற்புச் சாதனம்;ஒளியியல் அறியும் கருவி : காகித ஆவணங்களில் குறியீடிடப்பட்டுள்ள குறியீடுகளை அல்லது குறியெழுத்துகளைப் படிக்கக்கூடிய சாதனம்.இது அந்தக் குறியீடுகளை அல்லது குறியெழுத்துகளை மின்னியல் துடிப்புகளாக மாற்றுகிறது.

optical resolution : ஒளிவத் தெளிவு.

optical scanner : ஒளியியல் வருடி : ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி.

optical scanning : ஒளியியல் நுண்ணாய்வு : ஒளியியல் வருடல் : எந்திரச் செய்முறைப் படுத்துதலுக்காகச் செய்திகளை மாற்றம் செய்கிற ஓர் உட்பாட்டு முறை.செய்தி எந்தப் பின்னணியில் தோன்றுகிறதோ அந்தப் பின்னணியின் பிரதி பலிப்பு அளவினை மதிப்பீடு செய்வதன்மூலம் இது செய்யப்படுகிறது.

optical storage : ஒளிவச் சேமிப்பு.

optimising compiler : உகப்பாக்கு மொழி மாற்றி.

optimization : உகந்த அளவாக்கம் : செயற் பாட்டு நிரல்தொடர் : ஒரு முடிவினை ஒரு வடிவமைப்பினை அல்லது ஒரு பொறியமை வினை, இயன்ற வரையில் முழுமையானதாக அல்லது செயற்படத்தக்கதாக உருவாக்குகின்ற முயற்சிகள் மற்றும் செய்முறைகள்.

optimization analysis : உகந்த ஆய்வு : குறிப்பிட்ட தடைகளுக்கிடையில் கணித முன் மாதிரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாறிகளின் மதிப்புகளுக்கிடையில் ஒரு உகப்புநிலை மதிப்புக் கண்டறிதல்.

optimize : உகந்த அளவாக்கு : உகப்பாக்கு : சில நிலையளவுருக்களின்-குறிப்பாக செலவு சேமிப்பளவு கால அளவு-மதிப்பினைக் குறுமப் படுத்துகிற அல்லது பெருமப்படுத்துகிற வகையின் ஒரு செயல்முறையை எழுதுதல் அல்லது ஒரு பொறியமைவினை வடிவமைத்தல்.

optimizer : திறன்மிகுப்பி : ஒரு கணினி, பிணையம் அல்லது பிற சாதனம் அல்லது முறைமையின் செயல்திறனை மிகுக்கச் செய்யும் ஒரு நிரல் அல்லது சாதனம்.எடுத்துக்காட்டாக, வட்டுத் திறன்மிகுப்பி நிரல், கோப்பு அணுகல் நேரத்தைக் குறைக்கிறது.