பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1051

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

optimizing complier

1050

oracle


optimizing compiler : திறன்மிகுப்பு மொழி மாற்றி : இந்த மொழி மாற்றி அதன் வெளியீட்டை (சிப்பு மொழி அல்லது பொறி மொழி) பகுப்பாய்வு செய்து இன்னும் திறன்மிக்க (குறுகிய, வேகமான) கட்டளைத் தொகுதியாக மாற்றித் தரும்.

optimum : உகந்தஅளவு : ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள வகைப்பாடுகளின் நோக்கில் மிகச் சிறந்ததும் மிகவும் விரும்பத்தக்கதுமான அளவு.

optimum programming : உகந்த அளவுச் செயல்முறைப்படுத்துதல்;உகந்த செயல்முறை நிரல் : ஒரு வகைப்பாட்டினைப் பொறுத்த அளவில் திறம் பாட்டினை பெரும் அளவுக்கு உயர்த்தும் செயல்முறைப்படுத்துதல்.மிகக்குறைந்த அளவு சேமிப்பியின் பயன்பாடு, மிகக் குறைந்த அளவு புற நிலைச் சாதனப் பயன்பாடு, மிகக்குறைந்த அளவுக் கணிப்புக்காலம் போன்றவை இதில் அடங்கும்.

optimum quantity : உகந்த அளவு.

optimum tree search : உகந்தஅளவு மர தேடல் : பல்வேறு மாற்று முறைகளில் மிகச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மர தேடல் முறை.

option : விருப்பத் தேர்வு : வாய்ப்பு : தேடல்.

optional : விருப்பத்தேர்வு.

option key : விருப்பத்தேர்வு : தேடல் விசை : சில விசைப் பலகைகளிலுள்ள திருத்தம் செய்வதற்கான விசை.இதனை அழுத்தும்போது அடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டுள்ள எழுத்துகளுக்கு வேறுவிதமான பொருள் விளக்கம் அளிக்கிறது.

opto-electronics : ஒளி மின்னணுவியல் : ஒளியியலையும் மின்னணுவியலையும் ஒருங்கிணைக்கும் தொழில் நுட்பம்.

OR : அல்லது : இரண்டு பிட்டு கள் (0 அல்லது 1) அல்லது இரண்டு பூலியன் மதிப்புகளை (சரி அல்லது தவறு) இணைப்பதற்கான ஒரு தருக்கமுறைச் செயல்பாடு.இச்செயல்பாட்டின் வெளிப்பாடு கீழ்க்காணும் வகையில் அமையும்.

oracle (software package) : ஆரக்கிள் (மென்பொருள் பொதிவு) : பெருமுகம், சிறு மற்றும் நுண்கணினிகள் போன்ற அனைத்து வகைக்