பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1052

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

orange book

1051

ordinate


கணினிகளுக்கும் பயன்படக்கூடிய பிரபல தொடர்புறவு தரவுதள மேலாண்மைத் திட்டம்.

orange book : ஆரஞ்சுப் புத்தகம் : அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு தொடர் பான தரக்கட்டுப்பாடுகளைப் பற்றிய ஆவணம். நம்பிக்கைக்குரிய கணினி முறைமையை மதிப்பாய்வு அளவுகோல் செய்யும் டிஒடி தர வரையறை.5200.28 எஸ்டீடி, டிசம்பர், 1985 என்ற தலைப்புடையது.A1 (மிகவும் பாதுகாப்பனது) முதல் D (குறைந்த பாதுகாப்புள்ளது) வரை பல்வேறு தர வரிசைகளை வரையறுக்கும் ஒரு வழி முறை. உயிர்நாடியான தரவுவை பாதுகாக்க ஒரு கணினி முறைமைக்குள்ள தகுதிப்பாட்டை இத்தர வரிசை குறிக்கிறது.

ORB : ஓஆர்பி : பொருள் கோரிக்கைத் தரகர் எனப்பொருள்படும் Object Request Broker என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் கிளையன் ஒரு பொருளுக்கான கோரிக்கயை முன்வைக்கும் ஓர் இடைமுகம்.ஓஆர்பி, கோரிக்கையை, பொருளை வைத்துள்ள வழங்கனுக்கு அனுப்பி வைக்கும். விடை மதிப்புகளை கிளையனுக்குத் திருப்பியனுப்பும்.

or circuit : அல்லது மின்சுற்று.

order : வரிசை முறை;எண் வரிசை : வரிசை : 1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மானித்துக் கொள்வதற்கு அனுமதிக்கிறது.

ordered list : ஒழுங்கமை வரிசை.

order of operations : செயற்பாடுகளின் வரிசைமுறை;இயக்க வரிசை : கணிதச் செயற்பாடுகளின் படிவரிசை முறை.இதன்படி மொத்தமாக்கம் முதலிடம் பெறுகிறது.அடுத்து அடுக்குப் பெருக்கல், வர்க்க மூலங்கள் கானல், பெருக்கல், வகுத்தல் இடம் பெறுகின்றன.பின்னர் கூட்டல், கழித்தல் வருகின்றன.

ordinal number : வரிசைமுறை எண் : ஒரு பொருளின் வரிசையை அடையாளம் காணும் எண்.சான்றாக, பதிவேடு 34.

ordinate : செங்குத்து ஆயம்;நெட்டாயம் : ஒரு வரைபடத்தில் செங்குத்தாக உள்ள Y-அச்சு.