பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1058

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

OTOH

1057

outer join


குவிக்கப்பட்டு மீக் குறுபாதை கணக்கிடப்படுகிறது.

OTOH : ஓடீஓஹெச் : இன்னொரு வகையில் பார்த்தால் எனப்பொருள்படும் on the other hand என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல், இணையச் செய்திக்குழுக்கள் மற்றும் பிற விவாதக் குழுக்களில் அடிக்கடி பயன்படுத்தப் படுகிறது.

OTPROM : ஓட்ப்ரோம் : one time prom என்பதன் குறும்பெயர். ஒரே ஒருமுறை மட்டுமே நிரல் தொடரமைக்கக் கூடிய ப்ராம் சிப்பு.

oughtred, william (1575-1660) : அவுட்ரெட், வில்லியம் (15751660) : ஆங்கிலேயக் கணித மேதை;1630இல் சறுக்கு விதியைக் கண்டு பிடித்தவர்.

outbox : வெளிச்செல் பெட்டி : செல்மடல் பெட்டி : மின்னஞ்சல் பயன்பாடுகளில் வெளியே அனுப்பப்படும் கடிதங்களைச் சேமித்து வைக்கும் பெட்டி.

outdegree : புறமுகப்போக்கு;வெளியாகு எண் : ஒரு மைய முனையைவிட்டுச் செல்லுமாறு தூண்டப்பட்ட விளிம்புகளின் எண்ணிக்கை. இது உள் முகப்போக்கு (indegree) என்பதிலிருந்து வேறுபட்டது.

outdent : வெளித்தள்ளு : வெளிமுகமாக்கம்; வெளியாக்கம் : ஒரு வாசகத்தின் ஒரே பத்தியில் மற்ற வரிகளிலிருந்து இடதுபக்கம் அதிக தூரம் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு வரியை உள்முகமாகச் செய்முறைப்படுத்துதல். இது "விளிம்பு வெட்டுதல்" (indentation) என்பதற்கு எதிரானது.

out line layout view button : வெளிக்கோடு உருவரை காட்சிப் பொத்தான்.

outer join : வெளி இணைப்பு;புறச்சேர்க்கை : தரவுத்தள மேலாண் மையில் உறவுநிலை எண்கணிதத்தில் நிலவும் ஒரு செயற்குறி. புறச்சேர்க்கை என்பது ஒரு விரிவாக்கப் பட்ட சேர்க்கைச் செயல்பாடு ஆகும். தொடர்புடைய தரவுகள் பதியப்பட்டுள்ள இரண்டு அட்ட வணை களிலிருந்து தேவையான தரவுவைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்முறைகளில் இதுவும் ஒன்று. முதல் அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகள் இந்தச் செயல்பாட்டின் வெளிப்பாடாக அமையும். முதல் அட்டவணையிலுள்ள ஏடுகளுக்கு உறவுடைய ஏடுகள் இரண்டாவது அட்டவணையில் இருப்பின் அத்தரவுகள்


67