பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1059

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

outer loop

1058

output bound


வெளியீட்டில் இடம்பெறும். அவ்வாறு இல்லாத ஏடுடன் அனுப்புவதற்கான கற்றை வெற்று மதிப்புகளுடன் இடம் பெறும்.

outer loop : வெளிக்கொக்கி வளையம்.

outline : வெளிக்கோடு.

outline font : வெளிக்கோடு அச்செழுத்து : ஒவ்வொரு எழுத்துகளின் அடிப்படை வெளிக் கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒருவகை அச்செழுத்து. வெளிக்கோடுகளை உண்மையான எழுத்துகளாக அளவிட்ட (பிட்மேப்) அச்சேறுவதற்கு முன் அளிக்கப்படுகிறது.

outline processor : வெளிக்கோடு செயலகம் : பயனாளர் ஆலோசனைகளை ஏற்கும் ஒரு மென்பொருள் பொதிவு. அவைகளை பயனாளர் குறிப்பிடும் வகையில் மாற்றி திரும்பமைத்து அதே எண்ணங்களின் பண்பட்ட மாதிரியாக அளிக்கிறது.

outline utility : வெளிக்கோட்டு பயன்கூறு.

outlook express : அவுட்லுக் எக்ஸ்பிரஸ் : ஒரு மின்னஞ்சல் மென்பொருள்.

out-of-band signaling : கற்றைப் புறத்து சமிக்கைமுறை : ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பாட்டுச் சமிக்கை போன்ற சிலவற்றை அனுப்பும் முறை.

out-of-line : முரணிய வரி : வெளியமை வரி : செயல்முறையின் முதன்மை வரிக்குள் அமைந்திராத அறிக்கைகள். எடுத்துக்காட்டு : முடிவற்ற துணை வாலாயங்கள்.

output : வெளிப்பாடு;வெளிப்படுபொருள்; வெளியீடு : 1. ஒரு கணினியின் உள்முகச் சேமிப்பு அலகிலிருந்து ஒரு சேமிப்பிக்கு அல்லது வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்படும் தரவு. 2. கணினியினால் செய்முறைப்படுத்தப்பட்ட தரவு வின் இறுதி முடிவு. இது உட்பாடு (input) என்பதற்கு வேறுபட்டது.

output area : வெளிப்பாட்டுப் பகுதி : வெளிப்பாட்டுத் தரவுக்காக முதன்மைச் சேமிப்பியில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதி. இது "உட்பாட்டுப் பகுதி"க்கு (input area) வேறுபட்டது.

output bound : வெளிப்பாடு கட்டுப்பட்ட : வெளிப்பாட்டுப் பணிகளினால் ஏற்படும் அதிக அளவு தாமதத் தன்மை. குறை