பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1062

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

overlapping

1061

overlay


overlapping : மேலழுந்து நிலை : ஒரு திரைக்காட்சியில் சாளரங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அல்லது ஒவ்வொன்றின் எல்லைகளுக் குள் மேலழுந்தி இருக்கும் நிலை.

overlap processing : மேலழுந்து செய்முறைப் படுத்துதல் : ஒரு கணினியில் உட்பாட்டினைச் செலுத்துதல், செய்முறைப்படுத்துதல், வெளிப்பாட்டு நடவடிக்கைகளைச் செய்தல் ஆகியவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல். இது மேலழுந்தா செய்முறைப்படுத்துதலிலிருந்து வேறுபட்டது.

overlay : மேற்கவிதல் : ஒரு செயல்முறையின் கூறுகளை துணைச் சேமிப்பியிலிருந்து நிறைவேற்றத்தக்கதாக உள்முகச் சேமிப்பிக்கு மாற்றுதல். இதனால் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கூறுகள் பல்வேறு சமயங்களில் ஒரே சேமிப்பு அமைவிடங்களை பிடித்துக் கொள்கி ன்றன. உள்முகச் சேமிப்பியில் தற்போது அணுகப்பட்டு வரும் செயல்முறையை அல்லது தரவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஒரு நேரடிச் சேமிப்புச் சாதனத்தில் (காந்த நாடா அலகு) தேவையான காலம்வரை வைத்து உள்முகச்சேமிப்பியின் வடிவளவை அதிகரிப்பதற்கு இந்த உத்தி பயன்படுகிறது.

overlay1 : மேல்விரி1 : 1. வட்டில் சேமிக்கப்பட்டுள்ள நிரல் மிகப் பெரியதாக இருப்பின் அதனை முழுமையாக நினைவகத்தில் ஏற்றமுடியாது. அத்தகைய நிரல்களுக்கு மேல்விரி கோப்புகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. நிரலை நினைவகத்தில் ஏற்றும்போது மேல்விரி கோப்பிலுள்ள ஒரு பகுதி நிரல் மட்டுமே நினைவகத்தில் ஏற்றப்படும். தேவைப்படும்போது அடுத்த பகுதி ஏற்றப்படும். அது நினைவகத்திலுள்ள முதல் பகுதியின் மீதே மேலெழுதப்படும். இந்த ஏற்பாட்டின்படி மிகப்பெரிய நிரலையும் நினைவகத்தில் ஏற்றி இயக்க முடிகிறது என்ற போதிலும் ஓரளவு இயக்கவேகம் குறைய வாய்ப்புள்ளது. 2. குறிப்பிட்ட பண்புக்கூறு களை அடையாளம் காணும் பொருட்டு திரை, மேசை அல்லது விசைப்பலகை மீது மேல் விரிக்கப்படும் அச்சிட்ட படிவம்.

overlay2 : மேல்விரி2 : 1. கணினி வரைகலையில் ஒரு படிமத்தின்மீது இன்னொரு படிமத்தை மேல் விரித்தல். 2. ஒளிக்