பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1064

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

overseas

1063

overwrite mode


யில் ஒரு வரியின் முடிவில் வாசக இழப்பீடு முறையாகச் சரியாக்கப்படாத நிலை.

overseas : அயல்நாட்டு : தொலைத்தரவு தொடர்புக் குழுமம்.

overstriking : மிகை அடிப்பு : மேலடிப்பு : அச்சுப்படியில் எடுப்பான முகப்பினைக்கொண்டு வருவதற்காக எழுத்துகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அச்சடித்தல்.

overtype mode : மேலெழுது முறை : ஏற்கனவே உள்ள எழுத்துகளின் மீது அவையழிந்து புதிய எழுத்துகள் அவ்விடத்தில் பதியுமாறு தட்டச்சிடும் முறை. INSERT Mode-க்கு மாறானது.

overwrite : மேலெழுதுதல் : ஓர்அமைவிட த்தில் ஒரு தரவுவைப் பதிவு செய்து, அந்த அமை விடத்தில் முன்னரே அடங்கியுள்ள தரவுவை அழித்தல் அல்லது சீர்குலைத்தல்.

overwrite mode : மேலெழுது பாங்கு : ஓர் ஆவணத்தில் உரையைத் தட்டச்சுச் செய்யும்போது புதிதாகத் தட்டச்சு செய்யப்படும் எழுத்துகள் அந்த இடத்தில் ஏற்கெனவே உள்ள எழுத்துகளை நீக்கி விடும். இப்போது புழக்கத்தில் உள்ள சொல் செயலித் தொகுப்புகளில் பெரும்பாலும் உட்செருகு பாங்கே (Insert Mode) இயல்பானதாய் உள்ளது. தேவையெனில் மேலெழுது பாங்காக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.