பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1070

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

page header band

1069

pagemaker


பகுதியில் அச்சிடப்படும் பொதுவான சொற்தொகுதி. அதில் பொதுவாகப் பக்க எண்ணும் ஒவ்வொரு பத்தியின் தலைப்புகளும் இருக்கும்.

page header band : பக்கத் தலைப்புப் பட்டை.

page-image buffer : பக்க படிம இடையகம் : பக்க அச்சுப் பொறியில் பயன்படுத்தப்படும் நினைவகம். ஒரு பக்கத்திலுள்ள பிட்மேப் படிமத்தை தாங்கியிருக்கும். அச்சுப்பொறியிலுள்ள ராஸ்டர் படிமச்செயலி பக்கத்தை வடிவமைக்கும் அச்சுப்பொறி அப்பக்கத்தை அச்சிடும்.

page-image file : பக்க-படிமக் கோப்பு : ஒரு பக்கத்தை அல்லது திரைப் படிமத்தை அச்சுப்பொறியோ அல்லது பிறக்காட்சிச் சாதனங்களோ உரு வாக்குவதற்குத் தேவையான குறிமுறைகளைக் கொண்டுள்ள ஒரு கோப்பு.

page in : சேமிப்பக மாற்றம்;பக்கம் புகுத்தல் : வட்டுச் சேமிப்பகத்திலிருந்து முதன்மைச் சேமிப்பகத்து செயல்முறைகளை அல்லது தரவுகளைப் பரிமாற்றம் செய்வதற்கான செய்முறை.

page layout : பக்க உருவரை.

page lay out programme : உருவரை நிரலாக்கத் தொடர் : மேசை மேல் பதிப்பக முறையாக உள்ள ஒரு பயன்பாட்டு நிரல் தொடர். இது பலவகை யான கோப்புகளில் இருந்து சொற்பகுதி மற்றும் வரைகலைகளை சேர்ப்பிக்கிறது. சரியான இடத்தில் வைத்தல், அளவெடுத்தல், கூட்டல் மட்டும் திரையில் குறிப்பிடப்படும் பக்க வடிவமைப்பிற்கேற்ப நறுக்குதல் போன்றவற்றை செய்யும். புகழ்பெற்ற பக்க வடிவமைப்பு நிரல் தொடர்களாக பேஜ்மேக்கர் குவார்க் எக்ஸ்பிரஸ் மற்றும் வென்ச்சுரா பப்ளிஷர்ஸ் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

page layout view button : பக்க உருவரைக் காட்சிப் பொத்தான்.

pagemaker : பேஜ்மேக்கர் : ஆல்டஸ் கார்ப்பரேஷன் பீ. சி மற்றும் மெக்கின்டோஷுக்காக உருவாக்கிய முழு தன்மைகள் கொண்ட மேசைமேல் பதிப்பக நிரல் தொடர். மெக்குக்காக (Mac) 1985 இல் அறிமுகப் படுத்தப்பட்ட இதுதான் மேசை மேல் பதிப்பக முறைக்கு தர நிருணயத்தை அமைத்தது. சொல்லப்போனால் ஆல்டஸ் நிறுவனத் தலைவரான பால் பிரெய்னியார்ட் என்பவர்தான்