பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1071

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

page makeup

1070

page reader


மேசைமேல் பதிப்பகம் (Desk Top Publishing) என்ற சொல் தொடரை உருவாக்கினார். இதன் பீ. சி பதிவு 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

page makeup : பக்க உருவாக்கம் : ஒரு அச்சிடப்படும் பக்கத்தை அமைத்தல் (வடிவம் ஆக்கல்). இதில் தலைப்புகளை அமைத்தல், அடிப்பகுதிகள், பத்திகள், பக்க எண்கள், வரைகலை, விதிகள் மற்றும் எல்லைக் கோடுகள் ஆகியவற்றை வடிவமைப்பது அடங்கியுள்ளது.

page mode memory : பக்கமுறை நினைவகம் : பொதுவான மாறும் ரேம் சிப்பு வடிவமைப்பு. நினைவக துண்மிகள் வரிசை மற்றும் பத்தி ஒருங்கிணைப்புகளால் அணுகப்படும். இல்லையென்றால், ஒவ்வொரு பக்கமுறையும் அணுக தேர்ந்தெடுக்கப்படும் வரிகளில் உள்ள வரிசைகளை யும், பத்திகளையும் நகர்த்தியாக வேண்டும். பக்க முறையில் ஒரு வரிசையில் உள்ள துண்மிகள் அனைத்தும் ஒரேஒரு முறை தேர்ந் தெடுக்கப்படுவதால், வேகமாக அணுக முடியும்.

page number : பக்க எண்.

page orientation : பக்க திசையமைவு : நீள்மை ஆண்மை இரண்டில் ஒன்று.

page out : வட்டு மாற்றம்;பக்கம் வெளியேற்றம் : கணினியின் முதன்மை நினைவகத்திலிருந்து வட்டுச் சேமிப்பிக்குச் செயல்முறைகளை அல்லது தரவுகளை மாற்றும் செய்முறை.

page preview : பக்க முங்காட்சி : சொல் செயலாக்க நிரல் தொடர்கள் மற்றும் பக்க வடிவமைப்புகள் பலவற்றில் காணப்படும் முறை. அச்சிடப்படும்போது ஒரு பக்கம் எவ்வாறு தோன்றும் என்று முழுப்பக்க அளவில் முன்னதாகவே காணலாம். இதில் தலைப்புகள், பகுதிகள் மற்றும் ஒரங்கள் போன்ற சேரும் தன்மைகளும் காணப்படும்.

page printer : பக்க அச்சடிப்பி;பக்க அச்சுப்பொறி : எழுத்து வாசகம் அடங்கிய ஒரு முழுப் பக்கத்தையும் அச்சடிக்கும் அச்சடிப்பி. இது, நிமிடத்திற்கு 2, 000 வரிகளை அச்சடிக்கக் கூடியது.

page reader : பக்க படிப்பி : தகவல்களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளி யியல் நுண்ணாய்வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைக் கட்டுப்பாடு