பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1073

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pagination

1072

painting


விதமாக இருக்கும். பெரும்பாலானவற்றில் இதை அழுத்தியும், காட்டி (cursor) ஆவணத்தின் முந்தைய பக்கத்தின் தொடக்கத்தில் நிற்கும் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிகளுக்கு முன்னால் சென்று நிற்கும்.

pagination : பக்க வரிசைப்பாடு;பக்கமாக்கல் : 1. ஒரு முழுப் பக்கத்தையும் வடிவமைக்கும் நோக்கத்திற்காக வரைகலைகளையும் அச்செழுத்துத் தொகுதிகளையும் மின்னணுவியல் முறையில் திறம்படக் கையாள்தல். 2. ஒர் அச்சிட்ட வாசகத்தைப் பக்கங்களுக்கு இணையான அலகுகளாகப் பகுத்தல். 3. பக்க எண் குறியீட்டு முறை.

paging : பக்கக் குறியீட்டு முறை;பக்கமாக்கம் : 1. இயல்புச் (முதன்மை) சேமிப்பகத்திலிருந்து உள்ளபடியான (துணை) சேமிப் பகத்துச் செயல் முறைகளை முன்னும் பின்னும் நகர்த்துவதற்கான உத்தி. 2. காட்சித்திரையில் காட்சியாக காட்டப்படும் பக்கத்திற்குப் பதிலாக அடுத்த அல்லது முந்திய பக்கத்தைக் காட்டுவதற்கான விசைப்பலகையிலுள்ள விசையின் செயற்பாடு.

paging memory : பக்கமாக்கும் நினைவகம்.

paging rate : பக்க குறியீட்டு வீதம்;பக்கமாக்க வீதம் : உள்ள படியான சேமிப்புப் பொறியமைவுகளில் ஒரு கால அலகின்போது நடைபெறும் சேமிப்பக மாற்றங்கள், வட்டு மாற்றங்கள் ஆகியவற்றின் சராசரி எண்ணிக்கை.

paint : படம்;வரைகலை : 1. கணினி வரைகலையில், திரையில் உண்மையாகவே ஒவியம் வரையப்படும். இதற்குப் பலகைக் குச்சி அல்லது சுட்டியைப் பயன்படுத்தி வண்ணபுருசுபோல இயக்கப்படும். 2. திரையில் ஏதாவது ஓரிடத்தில் தட்டச்சு செய்ததும் திரைவடிவம் ஏற்படுத்தல். திரையினை சொற் பகுதியில் வண்ணப்படுத்தல்.

paint brush : வண்ணத் தூரிகை : பல்வேறு கணினி வரைகலைப் பொறியமைவுகளில் பயனாளருக்குப் பலவகைத் துரிகை வடிவங்களை அளிக்க அமைந்துள்ள திறம்பாடு. காட்சித்திரையில் சுட்டியின் முள்ளை நகர்த்து வதன்மூலம் இது பயன்படுத்தப்படுகிறது.

painter : வரைகலைஞர்;ஒவியர்.

painting : வண்ணத்தீட்டல்;வண்ணப் பூச்சு : 1. ஒரு வரை கலை உட்பாட்டுச் சாதனத்தின்