பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1077

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paper tape code

1076

parabola


களிலும் (frames) வட்டத் துளைகளைத் இடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வரிசையும் ஒர் எழுத்தினைப் பற்றி நிற்கின்றது. ஒருவரிசை பொதுவாக 8 அலை வரிசைகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். ஒரு தனிவகை விசையைப் பயன்படுத்தித் தரவுகள் துளையிடப்படுகின்றன. இவை எழுத்துப் படிப்பி உதவியால் படிக்கப்படுகின்றன.

paper tape code : காகித நாடாக் குறியீடு;தாள் நாடா குறி முறை : காகித நாடாவிலுள்ள துளைகளின் தோரணிகளை அவை குறிக்கும் ஆல்ஃபா எண்மான எழுத்துகளுடன் தொடர்பு படுத்தப் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறை.

paper tape punch : காகித நாடாத் துளையிடல் தாள் நாடா துளையிடல் : குறியீட்டு உணர்வு வெளிப்பாட்டுச் சாதனம். இது கணினிக் குறியீட்டினை காகித நாடாவில் ஒரு புறக்குறியீடாக மாற்றுகிறது.

paper tape reader : காகித நாடாப் படிப்பி, தாள் நாடா வாசிப்பி : துளையிட்ட காகிதச் சுருளிலுள்ள துவாரங்களை எந்திரத்தின் மூலம் செய்முறைப் படுத்தக்கூடிய வடிவில் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உட்பாட்டுச் சாதனம்.

paper tape verifier : காகித நாடா சரிபார்ப்பி;தாள்நாடா சரி பார்ப்புச் சாதனம்.

paper-white : தாள் வெண்மை : ஒற்றைநிற கணினித் திரையகத்தில் ஒருவகை. வெண்மைநிறப் பின்புலத்தில் கறுப்புநிற எழுத்துகளைக் கொண்டிருத்தல் இதன் இயல்பு. இத்தகைய திரையகங்கள், கணினிப் பதிப் பகம் மற்றும் சொல்செயலாக்கச் சூழல்களில் மிகவும் செல்வாக்குப் பெற்றவை. ஏனெனில், வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்துகள் அச்சிட்டது போன்ற ஒரு தோற்றத்தை இவை தருகின்றன.

paper-white monitor : தாள்-வெண்மைத் திரையகம் : அச்சிட்ட பக்கத்தை ஒத்திருக்கும், வெண்மைநிறப் பின்புலமும் கறுப்புநிற எழுத்துகளும் கொண்ட கணினித் திரையகம். சில உற்பத்தியாளர்கள் தாள்-வெண்மை என்பதை பாண்டுத் தாளில் இருப்பதுபோன்ற இழைக்கப்பட்ட வெண்ணிறப் பின்புலத்தைக் குறிக்கப் பயன் படுத்துகின்றனர்.

parabola : நீள்வட்ட வடிவம்;பர வளையம் : வட்டக் கூம்பின்