பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1078

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parabolic reflector

1077

paradox


ஒரு பகுதியை ஊடு பொருள்களில் ஒன்றுக்கு இணையாகவுள்ள சமதளத்தினால் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் வரைகலை வளைவு. ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட காலக் கோட்டி லிருந்தும் சமதூரத்தில் இருந்து வரும் வகையில் நகர்ந்து செல்லும் ஒரு புள்ளியின் பாதை என்றும் இதனைக் கூறலாம்.

parabolic reflector : பரவளைய எதிரொளிர் : யு. எச். எஃப் பேண்டுக்கு மேல் இறுதியிலும், எஸ்எச்எஃப் பேண்டிலும் உள்ள அலைவரிசைகளை ஒளிக் கற்றைகள்போலவே நடத்தலாம். பரவளைய எதிரொளிர்வைப் பயன்படுத்தி தேடுஒளியை உருவாக்கும்போது சக்திமிக்க ஒளிக்கற்றை பரவளைய எதிரொளிர்வு உள்ள இடங்களில் விழுவதுபோல் இதை (தட்டு என்று சொல்லப்படுவது) யும் பயன்படுத்தி இணைக்கற்றையில் தொகுக்கப்பட்டுள்ள வானொலி சக்தியுடன்கூடிய அதிகத் திறன்மிக்க அலைவாங்கியை அளிக்க முடியும். தட்டு குறுக்களவு வீட்டுத் தொலைக்காட்சி வாங்கிக்கு 20 செ. மீ. முதலாக செயற்கைக் கோள்களின் தரை நிலையங்களுக்கு 30. மீ. வரை கொண்டிருக்கும்.

paradigm : கருத்தியல்;எடுத்துக் காட்டு;மேற்கோள், வாய்பாடு : ஒரு செயலாக்கத்துக்கோ அல்லது ஒரு முறைமைக்கோ மாதிரியத்தை வழங்கக்கூடிய ஒரு சரியான எடுத்துக்காட்டு அல்லது தோரணி.

paradise : பேரடைஸ் : வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்பரேஷனின் பேரடைஸ் துணை நிறுவனம் உருவாக்கிய புகழ்பெற்ற காட்சி அட்டைகள்.

paradox : பேரடாக்ஸ் : போர் லாண்ட் நிறுவனத்திலிருந்து வரும் பீசிக்களுக்கான கட்டமைப்புக்குத் தயாராக உள்ள, தொடர்பு முறை டி. பி. எம். எஸ். பயன்படுத்த எளிதாகவும் எடுத்துக்காட்டு முறையில் கேள்விகேட்கும் அமைப்பும் கொண்டது. அதனுடைய பால் (PAL) நிரல் தொடரமைப்பு மொழி தனித்தன்மை கொண்டது. பல பால் தொடர்கள் பரிமாற்ற பேரடாக்ஸ் கட்டளைகளைக் கொண்டது. இதனால் பேரடாக்ஸ் பயனாளர்கள் நிரல் தொடரமைப்பதை எளிதாகச் செய்ய முடியும். பேரபிக்ஸ் எந்திரம் (தகவல் தளப் பகுதி) தனியாகக் கிட்டும்."சி"நிரல் தொடர்கள் மூலமும் இதை அணுக முடியும்.