பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1084

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parity

1083

park


தகவல் பரிமாற்றத்தில் பிழையைச் சோதிக்கும் செயல் முறைக்கு சமன் சரிபார்ப்பு (parity check) என்று பெயர். ஒரு துண்மித் தொகுதி ஒரு முனையி லிருந்து இன்னொரு முனைக்கு அனுப்பப்படும்போது எத்தனை 1. கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிட்டு அந்த எண்ணிக்கை ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதைப் பார்த்து 1 அல்லது 0-வை அந்தத் துண்மித் தொகுதியோடு சேர்த்து அனுப்புவர். இந்த 1 அல்லது 0, சமன் துண்மி (parify bit) எனப்படும். பெறும் முனையில் சமன் துண்மி அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட துண்மித் தொகுதி பெறப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்படும். துண்மித் தொகுதி ஒர் எழுத்துக் குறி எனில், செங்குத்து மிகைமைச் சரிபார்ப்பு (vertical redundancy check) என்றும் வேறுவகையான தொகுதி எனில், கிடைமட்ட மிகைமைச் சரிபார்ப்பு என்றும் கூறுவர். இரண்டு இணக்கிகளுக் கிடையேயான தகவல் தொடர்பு சமன் சரிபார்ப்பு ஒரு முக்கிய அளபுரு ஆகும். சமன் துண்மி சரியாக இருந்தால் மட்டுமே இரண்டு இணக்கிகளும் தரவுவைப் பரிமாறிக் கொள்ளும்.

parity bit : சமநிலைத் துண்மி : எட்டியல்களின் ஒரு வரிசையுடன் பின்னிணைப்புச் செய்யப்படும் ஒரு சோதனைத் துண்மி. இதனால் இந்தத் தடுப்புத் துண்மிக்கு உட்பட்ட எட்டியல்கள் அனைத்தின் கூட்டுத் தொகையானது எப்போதும் ஒற்றைப்படையாக அல்லது எப்போதும் இரட்டைப்படையாக இருக்குமாறு செய்யப்படுகிறது.

parity check, odd : ஒற்றைச் சமன் சரிபார்ப்பு.

parity checking : சமநிலைச் சோதனை;இணைச் சரிபார்ப்பு : தரவுத் துண்மிகளுடன் சேர்த்துச் சோதனைத் துண்மிகளைப் பயன்படுத்தி தன்னியக்கமாகப் பிழைகளைக் கண்டறிதல்.

parity drive : சோதனை இயக்கி : ஒரு வட்டு வரிசையில் சோதனை துண்மிகளை வைத்திருக்கும் தனி வட்டு இயக்கி.

parity error : சோதனை பிழை : ஒரு எழுத்தின் சோதனை துண்மி யானது தவறாக இருக்குமானால் ஏற்படும் பிழை நிலை.

park : நிறுத்து : ஒரு படி/எழுது முனை நிலை வட்டினைத் தொடு

மானால் அதனால் ஏற்படும் சேதத்தினைத் தடுக்க