பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1087

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pass

1086

passive matrix LCD


என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை 1612இல் கண்டுபிடித்த முதலாவது கூட்டல் எந்திரம். இது மேசைக் கணிப்பி வகையைச் சேர்ந்தது. இது பல்லிணைகளைக் கொண்ட"0முதல்"9வரையிலான இலக்கங்களைக் கொண்டது. இது கூட்டல், கழித்தல் கணிப்புகளைச் செய்யக்கூடியது.

pass : ஒட்டம் : 1. ஒரு கணினி செயல்முறையை நிறைவேற்று வதில் ஒரு முழுமையான உட்பாட்டுச் செய்முறைப் படுத்தலையும் வெளிப் பாட்டுச் சுழற்சியையும் குறிக்கிறது. 2. ஒர் ஆதாரக் குறியீட்டினை ஒரு தொகுப்பி அல்லது இணைப்பி நுண்ணாய்வு செய்தல்.

pass by address : முகவரி மூலம் அனுப்பல் : ஒரு துணை நிரல்கூறுக்கு தருமதிப்பு அல்லது அளபுருக்களை அனுப்பி வைத்தலில் ஒரு வகை. இம் முறையில் அழைக்கும் துணை நிரல் அழைக்கப்படும் துணை நிரலுக்கு அளபுருவின் முகவரியை (நினைவக இருப் பிடத்தை) அனுப்பி வைக்கும். அழைக்கப்பட்ட துணைநிரல் அளபுருவின் மதிப்பை எடுத்தாளவோ, மதிப்பை மாற்றியமைக்கவோ, அதன் முகவரியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

pass by value : மதிப்பு மூலம் அனுப்பல் : ஒரு துணை நிரல் கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணைநிரலுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைக்கப்பட்ட துணைநிரல் நகல் மதிப்பைப் பயன்படுத்தலாம். மாற்றியமைக்கலாம். ஆனால் அளபுருவின் மூலமதிப்பை மாற்றியமைக்க முடியாது.

passive device : ஓட்டச் சாதனம் : குறியீடுகளை மாற்றியமைக்காமல் ஒட விடுகிற சாதனம்.

passive graphics : ஓட்ட வரைகலை.

passive hub : அமைதியான முனை : இயங்கக்கூடிய மின்னணு எதுவுமில்லாத, அனுப்பப் படும் சமிக்கைகளுடன் எதையும் சேர்க்கவியலாத கட்டமைப்பு முனை.

passive matrix LCD : இயங்காத எழுத்துரு எல்சிடி : பொதுவான எல். சி. டி. தொழில்நுட்பம். தேவையான பத்தியிலும் வரிசையிலும் மின்சாரத்தை அனுப்பு வதன்மூலம் ஒரு படப்புள்ளியில் வெளிச்சம் ஏற்படுத்துகிறது.