பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1089

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paste append

1088

patch string


paste append : புது ஏடாக ஒட்டு.

paste as hyper link : மீத்தொடுப்பாக ஒட்டு.

paste insert : செருகு ஒட்டு.

pastelmix : ஒட்டு/சேர்.

paste special : சிறப்பு ஒட்டு.

patch : வட்டப்பட்டை : 1. ஒரு பிழையைத் திருத்துவதற்காக அல்லது ஒரு செயல்முறையை மாற்றுவதற்காக ஒரு செயல் முறைக்குள் செலுத்தப்படும் குறியீட்டு முறையின் ஒரு பகுதி. 2. தற்காலிக மின்னியல் இணைப்பு. 3. கணினி வரைகலையில் ஒரு நீள்வளைவுப் பகுதி. இது மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கொண்டிருக்கும். பரப்புகளின் முப் பரிமா ணத்தை உருவாக்கும் வகையில் இவை அவற்றின் விளிம்புகளில் முதல்வரிசையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வட்டப்பட்டையின் இந்த விளிம்புகள் பெரும்பாலும் முப்பரிமாணத் தொடர் உருவங்களை உருவாக்கும். இந்த வட்டப் பட்டைகளைக் கையாள்வது கடினம் எனினும் ஒரு வட்ட ப்பட்டை நூற்றுக்கணக்கான பலகோணக் கட்டங்களை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதால் தரவு தளத்தின் வடிவளவு வெகுவாகக் குறைகிறது. 4. ஒரு செயல் முறையை அல்லது நிறைவேற்றத்தக்க கோப்பினை மாற்றமைவு செய்தல். இதனைப் பொதுவாக ஒரு வாடிக்கை யாளர் பொறியாளர் செய்கிறார்.

patch panel : ஒட்டுப் பலகை : கம்பி அமைப்புப் பலகை, பல தரப்பட்ட இடை இணைப்புகளுக்கான வசதியை நெட்டுளிகளின் வழியாக ஒட்டுப் பலகைகளுக்குப் பயன்படுத்துதல்.

patching : ஒட்டுதல் : 1. ஒரு செயல்முறையை மாற்றியமைப் பதற்காக அல்லது செயல் முறைப்படுத்தலின் பிழைகளைத் திருத்துவதற்காக அந்தச் செயல்முறையின் இலக்குக் குறியீட்டினை மாற்றுவதன் மூலம் மாற்றமைவு செய்வதற்கான தற்காலிக உத்தி. இது பெரும்பாலும் செயல்முறையின் மறுதொகுப்பினை அல்லது மறு இணைப்பினைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது. 2. வன்பொருளுக்கு தற்காலிக வட்டப்பட்டைகள் செய்தல்.

patch string : ஒட்டுச்சரம் : தட்டு அணுகலின் கோப்பு கையாளும் முறையில் ஒரு கோப்பினை அடையாளம்காணப் பயன்படுத்தும் சரம். டாஸ் இயக்க அமைப்பு (DOS)