பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

audio signal

108

audit software


சொல்லாக வெளியீடு தருகின்ற கணினியின் வெளியீட்டுச் சாதனம்.

audio signal : கேட்பொலி சமிக்கை : ஒலி அலைகளைப் பெரிதாக்கி மின்வடிவில் தருவது.

audio sphere : கேட்பொலிப் புலம் : மெய்நிகர் தோற்றச் சூழ்நிலையில், பயனாளரின் இருப்பிடம் மற்றும் ஒலி தோன்றுமிடத்திற்கேற்ப ஒலியை முப்பரிமாண முறையில் குறிப்பிடும் அமைப்பு.

audio system : ஒலி முறைமை; கேட்பொலி முறை.

audio tex : ஆடியோடெக்ஸ் : தொலைபேசி தகவலை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும் ஒலி முறையில் பதில் தரும் பயன்பாடு. குரல் வேண்டுகோள்களுக்கேற்ப, பயனாளர்கள் விசையை அழுத்தியோ அல்லது கேள்விகளுக்குப் பதில் கூறியோ தங்களது வழியை பல விருப்பத் தேர்வுகளுக்கிடையில் தேர்ந்தெடுப்பார்கள். நிதி தொடர்பான தரவுகளை அறியவும் பொருள்கள் வாங்க ஆணை தரவும் பயன்படுகிறது. தரவுத் தளங்களை மாற்ற வசதியாக இடைப் பரிமாற்ற அமைப்புகளில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

audio visual : ஒலி ஒளி : நாடாப்பேழைகளுடன் தொடர்புடையது. இவை தகவலை ஒலி மூலமும் ஒளியின் மூலமும் பதிவு செய்கின்றன.

audit : தணிக்கை : கணினி இயக்கங்களின் திறனை முடிவு செய்ய, அமைப்புகள், நிரல் தொடரமைத்தல் மற்றும் தரவு மைய நடைமுறைகளைச் சோதித்தல்.

auditing : கணக்காய்வு  : ஓர் இயக்க முறைமை, கோப்புகள், கோப்பகங்கள் போன்ற உருப்பொருள்களை உருவாக்கவோ, அணுகவோ, அழிக்கவோ முற்படுவது போன்ற பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து பதிவு செய்யும் இயக்க முறைமையின் செயல்பாடு. பாதுகாப்புக் குறிப்பேடு (Security log) என்றறியப்படும். ஒரு கோப்பில் அத்தகைய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். தகுந்த உரிமை பெற்ற பயனாளர்கள் மட்டுமே இக் கோப்பின் உள்ளடக்கத்தை அறிய முடியும்.

audit of computer system : கணினி முறைமைத் தணிக்கை : .

audit software : தணிக்கை மென்பொருள் : தரவுத் தளங்களிலிருந்து மாதிரிகளை எடுப்