பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1092

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PC bus

1091

PC-DOS


டொன்று இணைந்த மெல்லிய கம்பிகள்மூலம் பிணைக் கப்பட்டிருக்கும்.

PC bus : பீசி பாட்டை : முதல் தலைமுறை பி. எம், பீசிக்களில் பயன்படுத்தப்பட்ட பாட்டை அமைப்பு முறை ஆரம்ப 8 துண்மி நடத்தையும், ஏடீ. யுடன் அறிமுகப்படுத்தப்படும் 16 துண்மி விரிவாக்கத்தையும் உள்ளடக்கியது. 8 துண்மி அட்டைகள் 8 துண்மி மற்றும் 16 துண்மி அமைப்புகளுடன் சேரும். ஆனால் 26 துண்மி அட்டைகள் 16 துண்மி பகுதி யில் மட்டும்தான் சேரும். ஐ. எஸ். ஏ. பாட்டை என்றும் அழைக்கப்படும்.

PC card : பீசி அட்டை : நினைவக அட்டை அல்லது நினைவகம் மற்றும் உ/வெ அட்டை. பீசி-க்கான விரிவாக்க அட்டை.

PC-compatible : பீசி-ஒத்தியல்பு : ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/எக்ஸ்டீ மற்றும் பீசி/ஏடீ வன்பொருள், மென்பொருள் வரன் முறைகளைக் கொண்ட கணினிகளைக் குறிக்கிறது. இதுவே கணினித் தொழில்துறையில் சொந்தக் கணினிகளுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறை ஆகிப்போயிற்று. இவை இன்டெல் 80x86 அல்லது அதற்கு ஒத்தியல்பான சிப்புகளில் செயல்பட வல்லவை. இன்றைக்குப் பெரும்பாலான பீசி-ஒத்தியல்புக் கணினிகள் ஐபிஎம் அல்லாத நிறுவனங்களாலேயே தயாரிக்கப் படுகின்றன. சிலவேளைகளில் இவை நகலிகள் அல்லது வார்ப்புகள் (clones) என்று அழைக்கப் படுகின்றன. ஐபிஎம் பிசி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

PC-DOS : பீசி-டாஸ் : சொந்தக் கணினிக்கான வட்டு இயக்க முறைமை எனப் பொருள்படும் Personal Computer-Disk Operating System என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு. தொடக்க காலங்களில் ஐபிஎம் முக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸ் இயக்க

முறைமையை வழங்கி வந்தது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட் சொந்தமாக எம்எஸ் டாஸ் என வெளியிடலாயிற்று. ஐபிஎம் தன் சொந்த இயக்க முறைமையை பீ. சிடாஸ் என்ற பெயரில் வெளி யிட்டது. எம்எஸ்-டாஸ், பீசி-டாஸ் இரண்டும் முழுக்க முழுக்க ஒத்திருக்கும். சில பயன்பாட்டு நிரல்களின் கோப்புப் பெயர் மட்டுமே