பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1094

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PCM

1093

PC memory card


கணினிகளின் ஏந்தகையின் கட்டமைப்பு.

PCM : பீசிஎம் : "Plug Compatible Manufacturer" என்ற கணினிச் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதன் சாதனங்களை, தற்போதுள்ள கணினியமைவுகளில் செருகி, கூடுதலான வன்பொருள் அல்லது மென்பொருள் இடைமுகப்புகள் இல்லாமலேயே, அவற்றை இயக்கலாம்.

PCMCIA : பீசிஎம்சிஐஏ : சொந்தக் கணினி நினைவக அட்டைக்கான பன்னாட்டுச் சங்கம் என்று பொருள்படும் Personal Computer Memory Card International Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி வன்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் குழு. பீசி அட்டை அடிப்படையிலான புறச்சாதனங்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் செருகு வாய்கள்பற்றிய ஒரு பொதுவான தரவரையறையை உரு வாக்க இக்குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக மடிக்கணினி, உள்ளங்கைக் கணினி மற்றும் பிற கையகக் கணினி வகைகளுக்கும், ஏனைய நுண்ணறிவு மின்னணுச் சாதனங்களுக்குமான தரவரையறை இது. 1990 இல் முதன் முதலில்வெளியீடு-1 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட, பீ. சிஅட்டை களுக்கான தரவரையறையும் பீசிஎம்சிஐஏ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது.

PCMCIA connector : பீசிஎம்சிஐஏ இணைப்பி : 68-பின் உள்ள துளை இணைப்பி (Female Connector). பீசிஎம்சிஐஏ செருகு வாயில் உள்ளது. பீ. சி-அட்டை யிலுள்ள 68-பின் நுழை இணைப்பி (Male Connector) யுடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டது.

PCMCIA slot : பீசிஎம்சிஐஏ செருகுவாய்;கணினியின் கட்டமைப்பில் அதன் புறச்சாதனத்தில் அல்லது பிற அறிவு நுட்ப மின்னணுச் சாதனத்தில் பீசி அட்டை (PC card) யை இணைப்பதற்காக இடம் பெற்றுள்ள ஒரு திறப்பு. பீசி அட்டை செருகுவாய் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

PC memory card : பீசி நினைவக அட்டை :  : 1. ஒரு கணினியின் ரேம் நினைவகத்தை அதிகரிக்கின்ற கூடுதல் மின்சுற்று அட்டை. 2. பீசிஎம்சிஐஏ வரையறுத்துள்ள வகை-சார்ந்த பீசி அட்டை. இது வழக்கமான நிலைத்த ரேம் சிப்புகளைக்