பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

peripheral power supply

1102

permission


சந்தடி மிகுந்த ஒரு கணினிக்கூடத்தில், கணினி இயக்கு நருக்கு கணினியின் சேர்முனைப் (console) பொருப்பு குறித்தளிக்கப்படுகிறது. அவர் அதை விட்டுமிக அரிதாகவே அப்பால் செல்கிறார். வட்டு அடுக்குகளை ஏற்றி இறக்கவும், நாடாக்களைப் பொருத்தவும், அட்டைகளை அடுக்கவும், வெளிப்பாடுகளுக்கு முத்திரையிடவும், பல்வேறு உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்களை இயக்கவும் கூடுதல் ஆட்கள் உதவுகிறார்கள். இவர்கள் பொதுவாகப் புறநிலைச் சாதன இயக்குநர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

peripheral power supply : மாற்று மின்வழங்கி : ஒரு கணினி அல்லது ஒரு சாதனத்துக்கு வழங்கப்படும் வழக்கமான மின்வழங்கியில் பழுதேற் படும் போது மாற்று ஏற்பாடாக வைக்கப்பட்டுள்ள துணை நிலை மின்வழங்கி.

peripherals : வெளிப்புறக் கருவிகள் : ஒரு கணினி அமைப்பின் உள்ளீடு/வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் துணை நிலை சேமிப்பு அலகுகள்.

Periphery : சுற்றுவரை.

Perl : பேர்ல் : ஒரு கணினி மொழி. செய்முறைப் பிழிவு மற்றும் அறிக்கை மொழி என்று பொருள்படும் Practical Extraction and Report Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சி-மொழி மற்றும் யூனிக்ஸின் பல்வேறு பயன் கூறுகளின் அடிப்படையில் அமைந்த நிரல் மாற்றி (Interpreter) அடிப்படையிலான மொழி. உரைக் கோப்புகளிலிருந்து தகவலைப் பிரித்தெடுக்க மிகவும் திறன்வாய்ந்த, சரம் கையாளும் வசதிகளைக் கொண்டது பேர்ல் மொழி. சொற்களை இணைத்து ஒரு சரத்தைத் தொடுத்து அதனை ஒரு கட்டளை வடிவில் செயல் தளத்துக்கு (shell) அனுப்பும் திறனுள்ள மொழி. எனவே, பேர்ல் பெரும்பாலும் முறைமை மேலாண்மைப் பணிகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. பேர்ல் மொழியில் எழுதப்படும் ஒரு நிரல் உரைநிரல் (script) எனப்படும். அமெரிக்க நாட்டு நாசா நிலையத்தின் பொறி உந்துதல் ஆய்வுக்கூடத்தில் லேரி வால் (Larry Wall) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

permanent font : நிலையான அச்செழுத்து : அச்சுப்பொறி நிறுத்தப்

படும்வரை அச்சுப்பொறியின் நினைவகத்தில் தங்கியுள்ள அச்செழுத்து மென்பொருள்.