பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

photo-optic memory

1111

physical


ஒளியைப் பயன்படுத்தி எந்திர மின்சுற்றுகளை உருவாக்கிய அறிவியல்.

photo-optic memory : ஒளிப்பட-ஒளியியல் நினைவகம்;ஒளி ஊடக நினைவகம் : சேமிப்புக்காக ஒளியியல் ஊடகத்தைப் பயன்படுத்தும் நினைவகம். எடுத்துக்காட்டு : ஒளிப்படச் சுருளில் பதிவுசெய்வதற்கு ஒரு லேசரைப் பயன்படுத்தலாம்.

photorealism : நடப்பியல் ஒளிப்படம்;ஒளிப்பட நடப்பியல்;ஒளிப்பட எதார்த்தம் : ஒளிப் படத்துக்கு அல்லது நடப்பு வாழ்வின் தரத்துக்கு படங் களை/படிமங்களை உருவாக்குகின்ற செயலாக்கம். கணினி வரைகலையில் எதார்த்த ஒளிப் படத்திற்குத் திறன்மிக்க கணினிகள் தேவை. சிக்கலான கணிதத்தின் அடிப்படையிலான நுட்பம்மிக்க மென்பொருளும் தேவை.

photorealistic image synthesis : ஒளிப்பட நிகழ்வுணர் உருவப் பிரிவு : கணினி வரைகலையில், வரையறை செய்வதற்கான தொரு படிவம். உண்மையான உருவத்தை அது உள்ளபடியே காட்டுகிறது. மேற்பரப்பு உள்ளமைப்பு, ஒளிமூலங்கள், இயக்கத் தடங்கள், பிரதிபலித்தல் போன்ற தன்மைகளை அது உள்ளடக்கியுள்ளது.

photoresist : ஒளித்தடுப்பு : செதுக்குருவ மின்கடத்தாச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் செய்முறை. இதில், ஒரு சிலிக்கன் தகட்டு வில்லையில், இருக்க வேண்டிய பகுதியைத் திரையிட்டு மறைத்து, ஆக்சிகரமான பரப்பு அகற்றப்படுகிறது.

photosensor : ஒளிப்பட உணர் கருவி : ஒளி உணர் சாதனம். ஒளி முறை நுண்ணாய்வு எந்திரத்தில் பயன்படுத்தப்படுவது.

phrase search : சொல்தொடர் தேடல்.

phreak1 : அத்துமீறி : ஒரு தொலைபேசிப் பிணையம் அல்லது பிற பாதுகாக்கப்பட்ட கணினி அமைப்புகளின் அரண்களை உடைத்து நொறுக்குபவர் அல்லது அத்துமீறி உள்ளே நுழைபவர்.

phreak2 : அத்துமீறல் : தொலை பேசிப் பிணையம் அல்லது கணினிஅமைப்புகள்-இவற்றின் அரண்களை உடைத்து நொறுக்கி அத்துமீறல்.

physical : பருப்பொருளான : மின்னணு அல்லது எந்திர நிலையிலான சாதனங்களைக் குறிப்பிடுகிறது.