பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pin compatible

1116

ping-pong buffer


தாராளமாகத் திரும்பும் சக்கரம் அதை நகர்த்துவதற்காக மோட்டாரால் இயங்கும் நாடாவை அது தள்ளுகிறது.

pin compatible : மாற்றுச் சாதனங்கள் : ஒரே மாதிரியான செயற் பணிகளை ஆற்றும் சிப்புகள் மற்றும் சாதனங்கள் தொடர்புடையது. இவற்றை ஒன்றுக்கு மற்றொன்றை மாற்றிப் பொருத்தலாம். இந்தச் சாதனங்கள் ஒரே உட்பாட்டு/வெளிப்பாட்டுக் குறியீடுகளுக்கு ஒரே இணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

pincushioning : பிங்குஷனிங் : பக்கவாட்டில் சாய்கின்ற திரை தடு மாறல்கள்.

pin feed : குத்தூசி ஊட்டம் : அச்சு எந்திரத்தில் காகிதத்தை வாங்கிக் கொள்ளும் உருளையில் குத்துசி மூலம் காகிதத்தை விடுதல். இது உராய்வு ஊட்டத் திலிருந்து வேறுபட்டது.

குததூசி ஊட்டம்

ping of death : மரண பிங்;மரண அடி ; மரணத் தாக்கு : இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஒர் அழிவு நடவடிக்கை. இணையத் தரவு பரிமாற்றத்தில் ஒரு தரவுப் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதை விடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறிமுறையில் இணையத்தின் வழியாக ஒரு தொலைவுக் கணினிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அக்கணினியை நிலைகுலையச் செய்யமுடியும்.

ping pong : ஒன்றாடப் பயன்பாடு ; மாறி மாறி : உள்ளபடிக்கு கணக்கற்ற கோப்புத் தொகுதியில் செய்முறைப்படுத்துதல் தொடர்ந்து நடைபெறும் வகை யில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புச் சாதனங்களை மாற்றி மாற்றிப் பயன் படுத்துதல்.

ping-pong buffer : பிங்-பாங் இடையகம் : இரு கூறுகளான இடை நினை