பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PointCast

1127

point of presence


PointCast : பாயின்ட்காஸ்ட், முன் பரப்பு : இணையத்தில் ஒவ்வொரு பயனாளருக்கும் அவருக்கே உரித்தான செய்திக் கட்டுரைகளைத் தொகுத்துக் காட்டும் இணையச்சேவை. வைய விரிவலையில் உள்ள ஏனைய இணையப் பயன்பாடு களைப்போலன்றி பாயின்ட்காஸ்ட் தள்ளு தொழில் நுட்பத்தை (push technology) பின்பற்றுகிறது. கிளையனிலிருந்து குறிப்பிட்ட கட்டளை வரப் பெறாமலே, வழங்கன் தானாகவே தரவுவை அனுப்பி வைக்கும்.

point, decimal : பதின்மப் புள்ளி.

point, entry : நுழைவுப் புள்ளி;உள்ளீட்டு புள்ளி.

pointer : சுட்டு;சுட்டுவான்;குறி, காட்டி சுட்டி : 1. தொடர்புடைய ஒரு பதிவின் முகவரியைக் கொண்டிருக்கிற ஒரு கோப்பு அட்டவணை, ஒரு பதிவேடு, அல்லது வேறு தரவுத் தொகுதியுடன் தொடர்புடைய ஒரு தரவுக் கூறு. 2. சில கணினியமைவுகளில், நுண்பொறியின் அமைவிடத்தைக் குறிக்கிற காட்சித்திரையின் உருவமைப்பு.

pointer arithmatic : சுட்டுக் கணக்கீடுகள்.

pointer type : சுட்டு இனம்.

point identification : புள்ளி அடையாளம் : ஆயத்தொலைவு அமை விடம், அதன் தனிச் செய்முறைப்படுத்தல் அலுவற்பணிகள் உட்பட ஒரு வரைகலைப் புள்ளி பற்றிய முழு விவரிப்பு.

pointing : சுட்டுதல்.

pointing devices : காட்டும் சாதனங்கள்;சுட்டிகள்;சுட்டிக் காட்டும் சாதனம் : இறுதிப் பயனாளர்கள் கட்டளைகளைச் செலுத்தவும், தேர்வுகளைச் செய்யவும் அனுமதிக்கும் சாதனங்கள். விசைப்பலகையைப் பயன்படுத் துவதற்கு மாற்றாக கணினி அமைப்பில் உள்ள எண்ணெழுத்து அல்லது தரவுகளை நேரடியாக நுழைக்க அனுமதிக்கும் சாதனங்கள். எலிவடிவ சுட்டி மற்றும் இயக்கப்பிடிகளைக் காட்டும் சாதனங்களாகும்.

point listing : சுட்டுப் பட்டியலிடல் : பலரும் விரும்பிப் பார்வையிடும் வலைத்தளங்களை கொண்ட ஒரு தரவுத் தளம். தலைப்பு வாரியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். வடிவமைப்பு, உள்ளடக்கத்தின் அடிப்படையில் வலைத்தளங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

point of presence : கிளைப் புள்ளி;தொடு முனை, கிளை