பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

point of sale software

1128

poisson distribution


முனை;தொடு புள்ளி : 1 விரிபரப்புப் பிணையத்தில் ஒரு பயனாளர் தொலைபேசி மூலமாகப் பிணைத்துக் கொள்ளும் முனை. 2. நீண்ட தொலைவு தொலைபேசி இணைப்புத் தடத்தில், உள்ளுர் தொலைபேசி இணைப்பகத்துக்கு அல்லது தனிப்பட்ட ஒரு பயனாளருக்கான இணைப்பு பிரிந்து செல்லும் புள்ளி/முனை.

point of sale software : விற்பனை முனைய மென்பொருள்.

point of sale termination : விற்பனை முனைய முடிவிடம்.

point representation, fixed : நிலைப் புள்ளி உருவகிப்பு.

point representation, floating : மிதவைப் புள்ளி உருவகிப்பு.

point set curve : புள்ளித் தொகுதி வளைகோடு;புள்ளி இணைப்பு வளைவு : புள்ளி களிடையே குறுகிய கோடுகளின் ஒரு வரிசையை வரைவதன் மூலம் வரையப்படும் வளைகோடு.

point to point : நேரடி இணைப்பு.

point to point line : நேரடித் தொடர் பிணைப்பு : ஒரு தாய்க் கணினிக்கும் ஒரு சேய்மை முனையத்திற்குமிடையில் ஒரு நேரடித் தொடர்பினைக் கொண்டுள்ள செய்தித் தொடர்பு பொறியமைவு.

point-of-sale (POS) terminal : விற்பனை முனை முகப்பு : 1. உடனடியாக விற்பனையையும், இருப்பு பதிவேடுகளையும் ஒரு மையச் செயலகத்தில் புதுப்பித்து, 2. அச்சிடப்பட்ட விற்பனை பரிமாற்ற இரசீதினைத் தருகின்ற திறனுடைய ஒரு உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம்.

point-to-point channel : நேரடி இணைப்புத் தடம்.

point-to-point protocol (PPP) : நேரடி இணைப்பு நெறிமுறை : நேரடி இணைப்பு மரபொழுங்கு.

point-to-point Tunneling Protocol : நேரடி இணைப்பு சுரங்க வழி நெறிமுறை : மெய்நிகர் தனியார் பிணையங்களுக்கான (Virtual Private Networks-VPN) நெறிமுறை. குறும்பரப்புப் பிணையத்தின் சில கணுக்கள் இணையத்தோடு தொடர்பு கொள்ள முடியும்.

poisson distribution : பாய்சான் விநியோகம் : 18ஆம் துற்றாண்டு ஃபிரெஞ்சு கணிதவியலார் எஸ். டி. பாய்சான் உருவாக்கிய புள்ளிவிவர முறை. நடக்கக் கூடிய நிகழ்வுத் தொடரின் விநியோகத்தைக் கண்டுரைக்க