பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

poisson theory

1129

polarized component


இது பயன்படுத்தப்படுகிறது. சான்றாக தகவல் தொடர்பு அமைப்பு ஒன்றின் சராசரி பரிமாற்றத்தின் அளவினை மதிப்பிடக்கூடுமென்றால், ஒரு குறிப் பிட்ட காலத்தில் நடைபெறக்கூடிய பரிமாற்றங்களின் அதிக அளவு அல்லது குறைந்த அளவு எண்ணிக்கையையும் மதிப்பிடலாம்.

poisson theory : பாய்சான் கோட்பாடு : தரவு செய்தித் தொடர்புப் போக்குவரத்தின் ஒரு குறிப்பிட்ட அளவினைக் கையாள்வதற்குத் தேவைப்படும் இணைப்புக் கம்பிகளின் எண்ணிக்கையை மதிப்பிடு வதற்கான கணித உத்தி.

POKE : ஒரு கணினி மொழி நிரல் : கணினியின் செயல் முறைப்படுத்தத் தக்க நினைவுப் பதிப்பியில் இட அமைவு எதிலும் ஒரு மதிப்பளவினை நுழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கணினி மொழி நிரல்.

POL : பீஓஎல் : இரும"1"ஒரு திசையில் பாயும் மின்னோட்டத்தினாலும் இரும'O'எதிர் திசை மின்னோட்டத்தினாலும் குறிக்கப்படுகிற ஒரு நிலை. இது, ஆக்க முறை உண்மைத் தருக்க முறைக்கு வேறுபட்டது.

Polar : துருவ முனைப் போக்கு.

polar coordinates : துருவ ஆயத்தொலைவுகள்;முனை ஆயங்கள் : ஒரு நிலையான புள்ளியிலிருந்து கோணத்தையும் தொலைவையும் பொறுத்து ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறித்துரைக்கின்ற வரைகலை முறை.

polarity : காந்தப்போக்கு : மின் சக்தி ஏறிய பகுதிகளின் போக்கு. ஒரு துண்மியின் இரும நிலையை இதுவே முடிவு செய்கிறது. நுண் வரைகலை யில் படிகளை எடுக்கும்போது ஒரு தோற்றத்திலிருந்து மற்றொன்றுக்கான வெளிச்சத்திலிருந்து இருளுக்குள்ளான உறவு. பாசிட்டிவ் காந்தப் போக்கு என்றால் வெளிச்சப் பின்னணியில் கறுப்பு எழுத்துகள் இருக்கும். நெகட்டிவ் காந்தப்போக்கு என்றால் கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள் காணப்படும்.

polarized component : துருவப் பட்ட கருவிப்பொருள் : ஒரு மின்சுற்றில் ஒரு கருவிப் பொருளை இணைக்கும்போது, மின்சுற்றின் துருவம் பார்த்து கருவிப்பொருளின் முனைகளை ஒரு குறிப்பிட்ட திசைப் போக்கில் இணைக்கவேண்டும். இருதிசையன்கள், மின்திருத்திகள் மற்றும் சில மின்தேக்கிகள்