பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polarizing filter

1130

polymorphic tweening


ஆகியவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

polarizing filter : ஒளி வடிகட்டி : முனையத் திரைகளில் கண்ணை உறுத்தும் கூசொளியைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் துணைச் சாதனம்.

polish notation (PN) : போலந்துக் குறிமானம் : ஒரு தொடர் கணிதச் செயற்பாடுகளுக்கான தருக்க முறைக் குறிமானம். இதில் குழுமக் குறியீடு எதுவும் பயன்படுத்தப்படு வதில்லை. மாறாக போலந்து தருக்கவியலறிஞர் ஜான் லுக்காசியே வீக்ஸ் 1926இல் உருவாக்கிய முன்னடைக் குறிமானம் பயன்படுத்தப்படுகிறது.

polling : சாதன நுண்ணாய்வு : சில கணினி முனையப் பொறி யமைவுகளில் பயன்படுத்தப்படும் செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு உத்தி. இதில் மையச்செயலகம், ஒவ்வொரு சாதனத்திற்கும் செய்முறைப் படுத்துவதற்கு நேரம் தேவையா என்பதைச் சரி பார்க்கிறது. தேவைப்படுமாயின் அந்த அலகு தொடர்ந்து மற்றச் சாதனங்களை நுண்ணாய்வு செய்கிறது. இதற்கு ஒவ்வொரு சாதனத்தையும் விரைவாக இடைவிடாமல் நுண்ணாய்வு செய்திட வேண்டும்.

polling cycle : தேர்வுச் சுழற்சி : ஒரு நிரல் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு சாதனம் அல்லது பிணையக் கணு ஆகியவற்றுக்கு தகவல் அனுப்ப எடுத்துக்கொள்ளும் நேரமும் தொடர் நிகழ்வுகளும்.

pollution free : மாசு அற்ற;மாசு இல்லாத.

polygon : பாலிகன் : கணினி வரைகலையில் ஒரு தனிப் பொருளாக நகர்த்தக்கூடிய அல்லது வண்ணத்தில் நிரப்பக் கூடிய பல பக்கங்களை உடைய பொருள்.

polyhedron : பல்தளப் பிழப்புரு : ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களுடைய பொருள். இணைக்கப்பட்ட பாலிகான்களின் ஒரு குழு.

polyline : பல்வரி : கணினி வரைகலையில் இணைக்கபட்ட வரிகளின் ஒரு தொடராக அமைக்கப்படும் ஒரு தனிப்பொருள்.

polymorphic tweening : பாலிமார்ஃபிக் ட்வீனிங் : உயிர்ப்பட தொழில்

நுட்பம். ஒரு இருள் வேறு ஒன்றாக மாற்றும்போது இடைப்பட்ட உருவங்களை ஆரம்ப மற்றும் முடிவு வடிவங்களை வைத்து உருவாக்குவது.