பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polymorphism

1131

POP-3


polymorphism : பல்லுருப் பெறல் : பல உருவங்கள் என்பது பொருள். பொருள் சார்ந்த நிரல் தொடரமைப்பில் அனுப்பப்படும் பொருளுக்கு மாறுபட்ட முடிவுகளைத் தரக்கூடிய ஒரு பொதுவான வேண்டுகோளை (செய்தி) அனுப்பும் திறன்.

polyphase sort : பல கட்ட வரிசையாக்கம்;பன்முக நிலை வகைப்படுத்தி : புற நாடா வகைப்படுத்தி. இது ஆறு அலலது அதற்குக் குறைவான நாடாக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

polyvision : பல்காட்சி : அல்பைன் பாலிவிஷன் நிறுவனத்தின் தட்டை அட்டைக்காட்சி. செங்குத்தான மற்றும் கிடைமட்டமான மின்வாய்களுக் கிடையில்வரும் உலோக அயனிகளினாலான பிளாஸ்டிக் திரைப்படத் தினைப் பயன் படுத்துகிறது. இதில் மின்சாரம் குறுக்கிடும்போது உலோக அயனிகள் கறுப்பாகிவிடும்.

pong : பாங்க் : 1972ஆம் ஆண்டில் அட்டாரிக்கைச் சேர்ந்த நோலன் புஷ்நெல் (Nolan Bushnell) என்பவர் உருவாக்கிய உலகின் முதல் வணிக ஒளிக்காட்சி விளையாட்டு (first commercial video game) மேசை டென்னிஸ் போன்ற விளையாட்டு.

pooler : கூட்டிணைப்பி : முக்கிய நுழைவுத் தகவலை முதன்மை கணினிக்கு ஏற்புடைய வடிவத்தில் ஒருங்கிணைப்பதற்கான அல்லது மாற்றுவதற்கான சாதனம்.

pop : எடு : ஒர் அடுக்கை (stack) யில் மேலே உள்ள (கடைசியாகச் சேர்க்கப்பட்ட) உறுப்பினைக் கொணர்தல். இந்தச் செயலாக்கத்தில் அடுக்கை யிலிருந்து அவ்வுறுப்பு நீக்கப்பட்டு விடுகிறது.

pop instruction : ஒத்தியல்பு நெட்வேர் : மீட்பு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற கணி நிரல்.

POP-2 : பாப்-2 : பட்டியல் செய்முறைப்படுத்தும் மொழி. இது, எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.

ΡΟΡ-3 : பாப்-3 : அஞ்சல் நிலைய நெறிமுறை 3 என்று பொருள்படும்

Post Office Protocol 3 என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ பிணையங்களில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படும் அஞ்சல் நிலைய நெறிமுறையின் தற்போதைய பதிப்பு.