பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

populate

1132

port1


populate : பொரிவு;சோப்பு : ஒரு அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டையில் சில்லுகளையும் பொருள்களையும் பொருத்துதல். முழுதும் இனப்பெருக்கம் செய்த அட்டை என்பது, அதனுள் சேர்க்கக்கூடிய அனைத்துச் சாதனங் களையும் கொண்டிருக்கிறது என்றாகும்.

populated board : நெரிசல் பலகை : தனது மின்னணுவியல் அமைப்பிகள் அனைத்தையும் கொண்டுள்ள மின்சுற்று வழி. இது.'நெரிசலற்ற பலகை' unpopulated board என்பதிலிருந்து வேறுபட்டது.

popup : மேல் மீட்பு : திரையில் உள்ள சொற்பகுதி அல்லது உருவத்தின் மேற்பகுதியில் அழைக்கப்பட்டு காட்டப்படுகின்ற ஒரு வகையான பட்டியல். தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்தபோது பட்டியல் மறைகிறது. திரை மீண்டும் வருகிறது.

pop-up help : மேல்விரி உதவி : ஒரு மென்பொருளில் வழங்கப்பட்டுள்ள நிகழ்நிலை (Online) உதவி அமைப்பு. பயனாளர் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் மீது சொடுக்கினால் உதவிச் செய்திகள் மேல்விரி சாளரங்களில் தோற்ற மளிக்கும். பெரும்பாலும் சுட்டியின் வலது பொத்தானை அழுத்துவதால் இத்தகைய உதவி விளக்கக் குறிப்புகள் கிடைக்கும்.

pop-up menu or popup menu : மேல்விரி பட்டி : வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில், பயனாளர். ஒரு குறிப்பிட்ட உருப்படிமீது வைத்து, சுட்டியில் வலப்பொத்தானைச் சொடுக்கினால் உடனடியாய்த் திரையில் தோற்ற மளிக்கும் ஒரு பட்டி. திரையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் மேல்விரி பட்டி தோன்றும். பொதுவாக, பட்டியில் ஒர் உருப்படியைத் தேர்வு செய்தவுடன் பட்டி மறைந்துவிடும்.

pop-up messages : மேல்விரி செய்திகள் : மேல்-விரி உதவிக் குறிப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்போது திரையில் தோன்றும் செய்திகள்.

pop-up window : மேல்விரி சாளரம் : ஒரு குறிப்பிட்ட விருப்பத் தேர்வை தேர்ந்தெடுத்தவுடன் திரையில் தோன்றும் ஒரு சாளரம். பெரும்பாலும் சுட்டியின் பொத்தானை விடும்வரை இந்தச் சாளரம் பார்வையில் இருக்கும்.

port1 : துறை : ஒரு கருவியில் பிற சாதனங்களைப் இணைப்

பதற்கான பொருத்துவாய்.