பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

post

1138

post mortem dump


post : அஞ்சல், அஞ்சல்செய்;அஞ்சலிடு : செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடலில் ஒரு கட்டுரை அளித்தல். பருநிலை யிலுள்ள அறிக்கைப் பலகையில் அறிவிப்புகளை ஒட்டுதல் என்ற சொல்லிலிருந்து இச்சொல் உருவானது.

post document operator : குறிப்பு செயற்குறி.

post edit : ஒட்டுத் தொகுப்பு;பின்னிலைச் செப்பம் : ஒரு முந்தையக் கணிப்பிலிருந்து வெளிப்பாட்டுத் தரவுகளைத் தொகுப்பித்தல்.

postfix notation : பின்னொட்டுக் குறிமானம் : ஒரு கணிதக் குறிமானமுறை. இதன் மூலம், 5, 3 என்ற இயக்கப்படு எண்களின் கூட்டலை 53+ என்று குறிப்பிட முடியும். மறுதலைப் போலந்துக் குறிமானம், இந்தக் குறிமானத்தின் ஒரு வடிவமாகும். இது, முன்னொட்டுக் குறிமானத்திலிருந்து வேறுபட்டது.

post implementation review : பின் நிறைவேற்ற மறுஆய்வு : பல மாதங்கள் பயன்பாட்டிலுள்ள ஒரு பொறியமைவினை மதிப்பீடு செய்தல்.

post increment operator : பின் கூட்டு செயற்குறி.

postmaster : போஸ்ட் மாஸ்டர் (அஞ்சல் அதிகாரி) : 1. ஓர் அஞ்சல் வழங்கனில் மின்னஞ்சல் சேவைகளைப் பராமரிக்கும் பொறுப்பினை வகிப்பவரின் புகுபதிகைப் (logon) பெயர் (அதுவே, அவரின் மின்னஞ்சல் முகவரியுமாகும்). மின்னஞ்சல் சேவையில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புதல்/பெறுதலில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதெனில் போஸ்ட்மாஸ்டர் என்ற பெயருக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தால், அஞ்சல் வழங்கனின் நிர்வாகிக்கு சென்று சேர்ந்து விடும். (எ-டு) postmaster@yahoo. co. in. 2. மின்னஞசல் அனுப்புதல்/ பெறுதல் பராமரித்தலுக்கான ஒரு மென்பொருள். நூறு சதவிகிதம் ஜாவா மொழியிலேயே உருவாக்கப்பட்டது.

post mortem : பின்னாய்வு : ஒரு செயற்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பு அதனைப் பகுப்பாய்வு செய்தல்.

post mortem dump : பின்னாய்வு சேமிப்பு : ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தின் முடிவில் செய்யப்படும் சேமிப்புக் குவிப்பு. இது, நொடிப்புச் சேமிப்புக் குவிப்பிலிருந்து வேறுபட்டது.