பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

post office protocol

1139

post system


post office protocol : அஞ்சல் நிலைய நெறிமுறை : இணையத்திலுள்ள அஞ்சல் வழங்கனுக்கான நெறிமுறை. மின்னஞ்சலைப் பெற்று சேமித்து வைக்கிறது. முகவரி தாரருக்கு அனுப்பி வைக்கிறது. வழங்கனில் பிணைத்துக் கொள்ளும் கிளையன் கணினியில் அஞ்சலைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவேற்றமும் செய்யமுடியும்.

postprocessor : பின் செயலி : முதலில் வேறொரு செயலியினால் கையாளப்பட்ட தரவுகளில் மீது செயல்படக்கூடிய தொடுப்பி (linker) போன்ற ஒரு மென்பொருள் நிரல் அல்லது ஒரு சாதனம்.

PostScript : போஸ்ட் ஸ்கிரிப்ட் (பின்குறிப்பு) : அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பக்க விவரிப்பு மொழி. நெகிழ்வு மிக்க எழுத்துரு வசதிகளும் உயர்தர வரைகலை வசதிகளும் உடையது. உலகறிந்த பக்க விவரிப்பு மொழியான போஸ்ட் ஸ்கிரிப்ட், பக்க உருவரைக்கும், எழுத்துருக்களை ஏற்றி வடிவமைக்கவும் ஆங்கிலம் ஒத்த எளிய கட்டளைகளைக் கொண்டது. அடோப் சிஸ்டம்ஸ் டிஸ்பிளே போஸ்ட்ஸ்கிரிப்ட் என்னும் மொழியையும் வழங்குகிறது. டிஸ்பிளே போஸ்ட் ஸ்கிரிப்ட் முற்றமுழுக்க விஸிவிக் (WYSIWYG-What You See Is What You Get) வசதியை வழங்குகிறது. திரையில் பார்வையிடவும் அப்படியே அச்சிடவும் இவ்விரண்டு மொழிகளும் இணைந்து பயன் தருகின்றன.

Postscript font : போஸ்ட் ஸ்கிரிப்ட் எழுத்துரு : போஸ்ட் ஸ்கிரிப்ட் பக்க விவரிப்பு மொழியில் வரையறுக்கப்பட்டுள்ள ஒர் எழுத்துரு. போஸ்ட்ஸ்கிரிப்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் அச்சிடுவதற்கென உருவாக்கப்பட்டது. போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துருக்கள் பிட்மேப் எழுத்துருக் களிலிருந்து மாறுபட்டவை. நளினம், தெளிவு உயர்தரமானவை. அச்சுக்கலைத் துறையில் நிலை பெற்றுவிட்ட தரக்கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் இசைந்தவை.

PostScript printer : போஸ்ட் ஸ்கிரிப்ட் அச்சுப்பொறி : போஸ்ட்ஸ்கிரிப்ட் ஆவணங்களை அச்சிடுவதற்கான அச்சுப்பொறி.

post system : பதிவு பொறியமைப்பு : பண்டக சாலைகளும், பேரங்காடி

களும் விற்பனை முனையப் பொறியமைவு