பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prefix notation

1147

preprocessor


வேண்டுமா, ஆவணத்தின் தோற்றம் அச்சுக்குப் போவது போன்ற ஓர இடைவெளிகளுடன் தோற்றமளிக்க வேண்டுமா மற்றும் இது போன்ற விருப்பத் தேர்வுகளை முன்கூட்டியே அன்மத்துக் கொள்ள முடியும்.

prefix notation : முன்னொட்டுக் குறிமானம் : கணித எண்ணுருக் கோவைகளை உருவாக்குவதற்கான முறை. இதில் ஒவ்வொரு இயக்கு எண்ணும் இயக்கப்படு எண்களுக்கு முன்னதாக வருகிறது. எடுத்துக்காட்டு : (x+y) xz என்னும் கோவையை 'xy+xz' என்று குறிக்கலாம். 5 ஐயும் 3 ஐயும் கூட்டுவதை +53 என்று போலந்துக் குறிமானத்தில் குறிக்கலாம்.

p-register : செயல்முறைப் பதிவேடு : செயல்முறை மேடைப் பதிவேடு. இதில் நடப்பு கட்டளைகளின் அமைவிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

pre-increment operator : முன் கூட்டுச் செயற்குறி.

Preliminary study : ஆரம்ப நிலை ஆய்வு.

preloaded : முன்பதிய வைத்த.

premium rate service : உயர் மதிப்புக் கட்டண சேவை ஐஎஸ்டின் (ISDN-Integrated Services Digital Networks) தொலைதொடர்புச் சேவையில் ஒருவகை சேவை.

preparation, data : தரவுத் தயாரிப்பு.

prepress : முன் அச்சு : அச்சிடல் மற்றும் அச்செழுத்துக் கலையில், ஒளிப்படக் கருவிக்குத் தயாராகும் பொருள்களை அச்சு நிலைவரை தயாரித்தல். அச்சுக் கோப்பு மற்றும் பக்கமாக்குதல் இதில் அடங்கும்.

preprinted forms : முன் அச்சிட்ட படிவங்கள் : கணினி உருவாக்கிய வெளிப்பாட்டினைக் கொண்டிருக்கும் படிவங்கள். இவற்றில் ஏற்கெனவே அச்சிட்ட தலைப்புகளுடனும் அடையாளத் தரகவல்களுடனும் கூடிய ஒரு கணினியமைவு பதிவு செய்யப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் புறநிலை அறிக்கைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

preprocessor : முன்செய்முறைப் படுத்தி;முன்னிலைச் செயலாக்கி :

உட்பாட்டுத் தரவுகளில், மேற்கொண்டு செய்முறைப்படுத்துவதற்கு முன்பு, மாற்றம் செய்தல், படிவமாக்குதல், சுருக்கஞ் செய்தல் போன்ற செயற்பணிகளைச் செய்கிற செயல்முறை.