பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

primary data

1150

primary memory


வண்ணங்களின் தொகுதி. சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவை அடிப்படை வண்ணங்கள். வண்ணம் பூசுபவர்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகியவற்றை அடிப்படை வண்ணங்கள் என்பர். இந்த அடிப்படை வண்ணங்களை ஒன்றிலிருந்து ஒன்று உண்டாக்க முடியாது. ஆனால் இவற்றை ஒன்றோடொன்றுகலந்து வேறு வண்ணச்சாயல்களை உருவாக்கலாம்.

primary data : அடிப்படைத் தரவு : மூலாதாரத்திலிருந்து பெறப்பட்ட தரவு. வானிலை அறிவிப்புத் துறையில் பெறப்பட்ட பயனுள்ள தரவு அடிப்படை தரவுக்கு எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

Primary Domain Controller : முதன்மைக் களக் கட்டுப்படுத்தி : 1. விண்டோஸ் என்டீ-யில் பிணைய வளங்களையும், பயனாளர் கணக்குகளையும் மையப்படுத்தப்பட்ட முறையில் நிர்வகிக்க உதவும் ஒரு தரவுத்தளம். பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட புரவன் கணினியில் துழைவதற்குப் பதிலாக ஒரு களத்தினுள் துழைய இந்த தரவுத் தளம் அனுமதிக்கிறது. ஒருகளத்தினுள் இருக்கும் கணினிகள் பற்றிய விவரங்களை வேறொரு கணக்குவைப்புத் தரவுத்தளம் கவனித்துக் கொள்கிறது. களத்தின் வளங்களைப் பயனாளர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. 2. ஒரு குறும்பரப்புப் பிணையத்தில், களத்தின் பயனாளர் கணக்குகளுக்கான தரவுத்தளத்தின் முதன்மை நகலைப் பராமரித்து, பயனாளர்களின் புகுபதிகைக் கோரிக்கைகளைச் சரிபார்க்கும் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் வழங்கன் கணினி.

primary index : அடிப்படை அட்டவணை : ஒரு கோப்பின் நடப்புச் செயலாக்க வரிசை முறையைக் கட்டுப்படுத்தும் அட்டவணை.

primary key : அடிப்படைப் புதிர்க் குறிப்பு : முதன்மைத் திறவுகோல் செய்முறைப்படுத்த பதிவேடுகளை வகைப்படுத்துவதற்கு அல்லது ஒரு கோப்பினுள் ஒரு குறிப்பிட்ட பதிவேட்டின் அமைவிடத்தைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வழிகாட்டுங்குறிப்பு.

primary memory : முதன்மை நினைவகம்; அடிப்படை நினைவகம் : இது மையச் செயலகத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கணினி நினைவகம் (ரேம்) இது மின்சக்தி இல்லை