பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

primary storage

1151

print


யென்றால் நினைவகத்தில் சேமித்தவற்றை வைத்துக்கொண்டிராது.

primary storage : முதன்மைச் சேமிப்பகம் : குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நாடா போன்ற சேமிப்புச் சாதனங்கள் துணைநிலை சேமிப்பகங்கள் அல்லது சில வேளைகளில் காப்புச் சேமிப்பகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

prime factors : பகாஎண் காரணிகள்.

prime number : பகாஎண்.

primer : முதன்மை ; ஆரம்ப : ஒரு ஆரம்ப விளக்கக் கையேடு.

prime shift : முதற்படி முறை மாற்றம் : ஓர் அமைவனத்தின் இயல்பான அலுவல் நேரத்துடன் ஒத்திருக்கிற வேலை முறைமாற்றம், முடிவு முறைமாற்றம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.

primitive : ஆதிநிலை; தொடக்கநிலை : 1. ஆதாரமான அல்லது அடிப்படையான அலகு. ஒரு எந்திர நிரலின் மிக அடிமட்ட நிலையினை அல்லது ஒரு மொழி பெயர்ப்பின் மிகவும் கீழ்மட்ட அலகினைக் குறிக்கிறது. 2. கணினி வரைகலையில் புள்ளிகள், கோடுகள், கூறுகள், எழுத்துகள் போன்ற கூறுகளைக் குறிக்கிறது.

primitive data type : மூலத் தரவு இனம்.

primitive element : ஆதிநிலைக் கூறு; தொடக்க நிலைக்கூறு : கோடு, கூறு, புள்ளி போன்ற வரைகலைக் கூறு. சிக்கலான உருவங்களை அல்லது உருக்காட்சிகளை உருவாக்குவதற்கு இவற்றை வரவழைக்கலாம் அல்லது மற்ற ஆதி நிலைக்கூறுகளுடன் இணைக்கலாம்.

print : அச்சு; அச்சிடு : கணிப்பணியில் தகவலை அச்சுப்பொறிக்கு அனுப்புதல். சில மென்பொருள்களில் சில வேளைகளில் இச்சொல், காண்பி, நகலெடு என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பேசிக் மொழியில் PRINT என்னும் கட்டளை வெளியீட்டைக் கணினித் திரையில் காட்டும். அதுபோலவே சில பயன்பாட்டுத் தொகுப்புகளில், PRINT