பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

print area

1152

print control character


என்னும் கட்டளைமூலம் ஒரு கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்குப்பதில் வட்டில் பதிவு செய்யும்படி திசை மாற்றமுடியும்.

print area : அச்சு பரப்பு.

print buffer : அச்சு இடையகம்; அச்சு இடைநினைவகம் : ஒரு தகவலை அச்சுப் பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத்தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவலை, நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகிறது. இந்த நினைவகப் பகுதி அச்சு இடையகம் அல்லது அச்சு இடைநினைவகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடைநினைவகப் பகுதி (1) ரேம் (RAM) நினைவகம் (2) அச்சுப்பொறி (3) கணினிக்கும் அச்சுப்பொறிக்கும் இடையேயுள்ள ஒரு தனி சாதனம் (4) வட்டு - ஆகிய இவற்றுள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு இருப்பினும், மெதுவாகச் செயல்படும் அச்சுப்பொறிக்கும் வேகமாகச் செயல்படும் கணினிக்கும் இடையே, தகவலின் தற்காலிகத் தங்குமிடமாகச் செயல்படுகிறது. அச்சு இடையகங்கள் வசதிகள் அடிப்படையில் வேறுபடுகின்றன. சிலவற்றில் ஒருசில எழுத்துகளையே இருத்த முடியும். சிலவற்றில் அச்சிடுவதற்கான கோப்புகளை ஒரு சாரை (Quene) யில் நிறுத்திவைத்துக் கையாள முடியும். மறு அச்சிடல், சில அச்சுப்பணிகளை நீக்கிவிடுதல் போன்ற பணிகளைச் செய்ய முடியும்.

print chart : அச்சு வரைபடம் ; அச்சிட்ட படிவம் : ஓர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப்படிவத்தை வரைவதற்குப் பயன்படும் படிவம். இது அச்சடிப்பி இடப்பரப்பு வரைபடம், அச்சடிப்பி வடிவமைப்புப் படிவம், அச்சுப்பக்க அமைப்புத் தகடு என்றும் அழைக்கப்படும்.

print column : அச்சுப் பத்தி : துணைக் கூட்டல் அல்லது கூட்டலிடப்படக்கூடிய வகையில் அச்சு அறிக்கையின் மீதுள்ள தகவல் பத்தி. அறிக்கை எழுதுபவரின் விளக்கக் குறியில் அச்சுப்பத்திகளே இன்றியமையாதவை.

print control character : அச்சுக்கட்டுப்பாட்டு எழுத்துரு : ஒரு வரி வாரி அச்சடிப்பியில் செயற்பாட்டுக்கான கட்டுப்பாட்டு எழுத்து. சகட மீட்சி, பக்க