பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

printer engine

1155

printer font


பாட்டுத் தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறியில் அச்சிடுவதைச் இயல்விப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள்.அக்குறிப்பிட்ட அச்சுப்பொறியின் வன்பொருள் அமைப்பு,அகநிலை மொழிபற்றிக் கவலை யின்றி அச்சிடலாம்.பயன்பாட்டுத் தொகுப்புகள் பல்வேறு வகையான அச்சுப்பொறிகளை அவற்றுக்குரிய சரியான இயக்கி நிரல்களின் உதவி களுடன் பயன் படுத்திக் கொள்ள முடியும். இக்காலத்தில் வரைகலைப் பணித் தள இயக்க முறைமைகள் தம்மகத்தே கொண்டுள்ள இது போன்ற இயக்கி நிரல்களை பயன்பாட்டுத் தொகுப்புகள் ஒவ்வொன்றும், தங்களுக்கென இயக்கி நிரல்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.

printer engine:அச்சுப்பொறி எந்திரம்:லேசர் அச்சுப்பொறி போன்ற பக்க அச்சுப்பொறிகளில் அச்சிடும் பணியை நிறை வேற்றுகிற பாகம்.பெரும் பாலான அச்சுப்பொறி எந்திரங்கள் தன்னிறைவு பெற்றவையாய்,மாற்றத்தகு மைப்பேழைகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன.இந்த எந்திரம் அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி யினின்றும் வேறுபடுகிறது.உலகில் பெருமளவு பயன்படுத்தப்படும் அச்சுப்பொறி எந்திரங்கள் கேனன்(Canon)நிறுவனம் தயாரித்தவை.

printer file:அச்சுப்பொறி கோப்பு;அச்சுப்பொறிக் கோப்பு:அச்சிடப்படத் தயாராக அச்சு உருவ வடிவத்தில் உள்ள ஆவணம்.அச்சுப்பொறிக்கு அச்சிட அனுப்பப்படும் தரவுகளை ஒரு கணினிக் கோப்புக்கு திசை திருப்பி சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.இத்தகைய கோப்பு பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப் படுகிறது.எடுத்துக்காட்டாக,அச்சுக்கு அனுப்பப்படும் வெளி யீட்டை அப்படியே இன்னொரு கணினிக்கு அல்லது இன்னொரு நிரலுக்கு உள்ளீடாகத் தரமுடியும்.பின்னொருநாளில் இக்கோப்பினை நேரடியாக அச்சுப் பொறிக்கு அனுப்பி எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.சில வேளைகளில் அச்சுப்பொறி இயக்கிக் கோப்பினைத் தவறுதலாக சிலர் அச்சுப் பொறிக் கோப்பு எனக் குறிப் பிடுகின்றனர்.

printer font:அச்சுப்பொறி எழுத்துரு:அச்சுப்பொறிக்குள் தங்கியிருக்கும் அல்லது அச்சுப் பொறிக்கென வைத்திருக்கும்