பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

print zone

1160

privacy


தொகுதியை அடக்குகிறகிறது தனியொரு கூறு.

print zone : அச்சு வட்டாரம்;அச்சு மண்டலம்;அச்சுப் பகுதி : செயல் முறைப்படுத்தலில் ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட நீளப் பகுதி. இதனுள் தரவுகள் புத்திகளில்'வரிசைப்படுத்தப் படுகின்றன'.

priority : முன்னுரிமை;முந்துரிமை : நுண்செயலியின் கவனத்தைக் கவர்வதில், கணினியின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னுரிமை பின்பற்றப்படுகிறது. கணினி, கண்ணுக்குப் புலனாகாத முன்னுரிமைகளின் அடிப்படையிலேயே பல்வேறு வகையான முரண்களும் மோதல்களும் தவிர்க்கப்படுகின்றன. அதேபோல கணினியால் நிறைவேற்றப்படும் பணிகளும், எப்போது, எவ்வளவு நேரம் நுண்செயலியின் நேரத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கணினிப் பிணையங்களில் பணி நிலையங்கள் எப்போது, எவ் வளவு நேரம் தகவல் தொடர்பு இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற முன்னுரிமை நிர்ணயிக்கப்படுகிறது. எவ்வளவு விரைவில் அனுப்பப்பட வேண்டும் என்கிற முன்னுரிமை செய்திப் பரிமாற்றத்துக்குப் வரையறுக்கப்படுகிறது.

priority assignment : முன்னுரிமைப் பணி.

Priority Frame : பிரியாரிட்டி ஃபிரேம் : (முன்னுரிமைச் சட்டம்) : இன்ஃபோ நெட் அண்ட் நார்தான் டெலிகாம் இன்க் நிறுவனம் உருவாக்கிய ஒரு தொலைத் தொடர்பு நெறிமுறை. தரவு, படநகல் மற்றும் குரல் தகவல்களைச் சுமந்து செல்வதற்கென வடிவமைக்கப் பட்டது.

priority interrupt : முந்துரிமை இடையீடு : பொறியமைவினுள் மற்ற இடையீடுகளுக்கு மேலாக முந்துரிமையளிக்கப் பட்டுள்ள ஒர் இடையீடு.

priority processing : முந்துரிமைச் செய்முறைப்படுத்துதல் : ஒரு பணியின் வரிசை முறையைக் குறித்தளிக்கப்பட்ட முந்துரிமைகளின் அடிப்படையில் செய்முறைப்படுத்துதல்.

privacy : தனிமறைவு;அந்தரங்கம் : ஒரு பயனாளரின் சேமிக்கப்பட்ட கோப்புகள், மின்னஞ்சல் போன்ற தரவுகள் அவருடைய அனுமதியின்றி