பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

problem description

1164

procedural language


வரையறுத்துக்கூறப் பயன்படுத்தப்படும் தருக்க முறையை வகுத்தல். 2. செய்யப்பட வேண்டிய ஒரு பணியினை வரையறுத்துக் கூறுதல்.

problem description : சிக்கல் விவரிப்பு : தகவல் செய்முறைப் படுத்தலில், ஒரு சிக்கலை உரைத்தல். இதில், தீர்வுமுறை பற்றிய விவரிப்பும் உள்ளடங்கி யிருக்கலாம். இந்தத் தீர்வேகூட, தரவு, உருமாற்றம், நடைமுறை கள், தரவுகள், தடைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக் கிடையிலான உறவு நிலையாக இருக்கலாம்.

problem oriented language (POL) : சிக்கல் சார்ந்த மொழி : ஒரு குறிப்பிட்ட வகைச் சிக்கல்களை வசதியாக எடுத்துரைப் பதற்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறைப்படுத்தும் மொழி. இது, இணைப்பு மொழி, எந்திர மொழி, நடை முறை சார்ந்த மொழி ஆகிய வற்றிலிருந்து வேறுபட்டது.

problem programme : சிக்கல் செயல்முறை : மையச் செய்முறைப்படுத்தும் அலகு சிக்கலான நிலையில் இருக்கும்போது நிறைவேற்றப்படும் செயல்முறை;சிறப்புரிமை நிரல்களைக் கொண்டிராத ஒரு செயல்முறை.

problem solving : சிக்கல் தீர்வு;சிக்கல் தீர்த்தல் : ஒரு கணினியினால் தீர்க்கப் படக்கூடிய ஒரு சிக்கல். இதற்கு ஒரு துல்லியமான கணிதச் சமன் பாடு தேவைப்படுவதில்லை. எனினும், கணினி உணர்ந்து கொள்ளக்கூடிய சில விதிகளின் தொகுதி தேவைப்படும். இது ஆறு நடவடிக்கைகள் அடங்கிய ஒரு செய்முறையாகும்; (1) சிக்கலை அடையாளங்காணல் (2) தொடர்புடைய தரவுகளைச் சேகரித்து வகைப்படுத்துதல் (3) மாற்று உத்திகளை உருவாக் குதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் (4) செயல் முறைப்படுத்துதல் (5) செயல் முறையை நிறைவேற்றுதல் (6) தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுதல். அனுபவமும், உரிய சிக்கல் தீர்வு உத்திகளைக் கையாளுவதும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை எளிதாக்கும்.

procedurai language : நடை முறை மொழி : கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது