பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

procedure

1165

procedure oriented language


தரவு செயலாக்கம் மற்றும் நிரல் தொடரமைத்தல் சார்ந்து சிக்கல்களை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கை முறையினை உருவாக்குவார்கள்.

procedure : நடைமுறை;செயற்படுமுறை;செயல்முறை : ஒரு நிரலில் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் நிறைவேற்றுகின்ற கட்டளைத் தொகுதி. இக் கட்டளைத் தொகுதிக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு செயல் முறைக்கும் உரிய மாறிகள், மாறிலிகள் அவற்றின் தர வினங்கள் வரை யறுக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு செயல்முறை இன்னொரு செயல் முறையால் அழைக்கப் படுவதுண்டு (இயக்கப்படுவ துண்டு). நிரலின் பிரதான செயல்பகுதியிலும் அழைக்கப்படலாம். சில கணினி மொழிகளில் செயல்முறை, செயல்கூறு (procedure and function) என்று வேறுபடுத்திப் பேசப்படுகிறது. செயல்கூறு என்பது தன் பணியை முடித்தபின் ஒர் ஒற்றை மதிப்பை (குறிப்பிட்ட தரவின மதிப்பை) அழைத்த நிரலுக்குத் திருப்பி யனுப்பும். செயல்முறை, தனக்கிட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்கும். மதிப்பு எதையும் திருப்பியனுப்பாது.

procedure call : செயல்முறை அழைப்பு : நிரலாக்கத்தில் ஒரு செயல்முறையைச் செயல் படுத்துவதற்கான நிரல். ஒரு செயல்முறை அழைப்பு இன்னொரு செயல்முறையில் உட்பொதிந்து இருக்க முடியும். அல்லது நிரலின் முதன்மையான பகுதியில் இடம்பெறும்.

procedure division : நடைமுறைப் பகுப்பு;செயல்முறைப் பகுப்பு : ஒரு "கோபால்" செயல்முறையின் நான்கு முக்கிய பகுதிகளில் நான்காவது பகுதி.

procedure oriented : நடைமுறை சார்ந்த : படி"ஏ"விலிருந்து படி 'பி'-க்குப் போவதற்காக பயனாளர் பின்பற்றுகின்ற பயன்பாடு. தரவு நுழைவு நிரலாக்கத் தொடர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

procedure oriented language : நடைமுறை சார்ந்த மொழி : விரிவான சிக்கல்களின் ஒரு தொகுதிக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தப்படும் நடை முறைகளை வசதியாக எடுத்துரைப்பதற்கு வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல்முறைப் படுத்தும் மொழி. எந்திர மொழி, சிக்கல் சார்ந்த மொழி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.