பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

process control

1166

processing, background


process : செய்முறை;செயற் பாங்கு நடைமுறை : 1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான, திட்டமிட்ட செயற்பாடுகளின் வரிசைமுறை. 2. செப்பமற்ற தரவுகளை பயனுள்ள செய்திகளாக உரு மாற்றுதல்.

process bound : வரம்புறு செய்முறை : செய்முறைப் படுத்தியின் வேகத்தினால் வரம் புறுத்தப்பட்டுள்ள கணினியமைவு.

process colour : நிறச் செயலாக்கம் : ஒர் ஆவணத்தில், அச்சிடுவதற்காக நிறங்களைக் கையாளும் வழிமுறை. ஒவ்வொரு நிறத்தொகுதியும் அதன் மூல அடிப்படை நிறக்கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. மூன்று அடிப்படை வண்ணங்கள் : வெளிர்நீலம் (Cyan), செந்நீலம் (Magenta), மஞ்சள் (Yellow). கறுப்பு நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பிற நிறங்கள் அனைத்தும் இந்த அடிப்படை நிறங்களின் கலவையில் உருவாக்கப்பட்டு அச்சிடப்படுகின்றன.

process control : செய்முறைக் கட்டுப்பாடு : எண்ணெய்ச் சுத்திகரிப்பு, எஃகு உற்பத்தி போன்ற தொழில் செய்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்குக் கணினியைப் பயன்படுத்துதல்.

process control activity : செய்முறை கட்டுப்பாட்டு நடவடிக்கை.

process control computer : செய்முறைக் கட்டுப்பாட்டுக் கணினி : செய்முறைக் கட்டுபாட்டுப் பொறியமைப்பில் பயன்புடுத்தப்படும் எண்மானக் கணினி. இதில் பொதுவாக நிரல் திறம்பாடு, சொல் நீட்சி, துல்லியம் ஆகியவை வரம் புறுத்தப்பட்டிருக்கும். காற்றில்லாத சூழல் வசதிகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது.

process control system : செயற்பாங்குக் கட்டுப்பாட்டு முறைமை.

process conversion : செய்முறை மாற்றம் : கணினியமைவின் இயக்க முறையை மாற்றியமைத்தல்.

processing : செய்முறைப் படுத்தல் : ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குத் தரவுகளைக் கணினி மூலம் பலவிதமாகத் திறம்படக் கையாள்தல்.

processing, automatic data : தானியங்கு தரவுச் செயலாக்கம்.

processing, background : பின்புலச் செயலாக்கம்.