பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programmable logic device

1171

programmatic interface



programmable logic device : நிரல்படு தருக்க சாதனம் : தயாரிப்பாளர் நிரலாக்காமல் வாடிக்கையாளரே நிரல் படுத்தக்கூடிய தருக்க சிப்பு. ஒரு வாயில் கோவையைப் (gate array) போன்று தருக்க வாயில்களின் தொகுதியைக் கொண்டிருக்கும். வாயில் கோவையைப் போன்று தயாரிப்பு நிலையிலேயே நிரலாக்கம் செய்து முடிக்கப்படவேண்டிய தேவையில்லை.

programmable memory : செயல் முறைப்படுத்தத்தக்க நினைவகம் : பொதுவாக பெரும்பாலான கணினிச் செயல்முறைகளும் தரவுகளும் சேமித்து வைக்கப்படும் உள்ளடக்கத்தை மாற்றக்கூடிய நினைவகம். பெரும்பாலும் குறிப்பின்றி அணுகும் நினைவகம் (RAM) அல்லது செயல்முறைப்படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம். (PROM)

programmable read only memory : செயல்முறைப் படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் : மின்னியல் துடிப்புகள் மூலம் செயல்முறைப்படுத்தக்கூடிய நினைவகம். ஒரு முறை செயல் முறைப்படுத்தியதும் அதனை படிக்கமட்டுமே செய்யலாம். செயல்முறைப்படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம், நினைவகச் செயல் முறைப்படுத்தி எனப்படும் ஒரு தனிவகை எந்திரம் வெற்றுச்சிப்புகளில் புதிய செயல் முறையை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

programmatic interface : நிரல்நிலை இடைமுகம் : 1. பயனாளரின் கட்டளைகளை அல்லது ஒரு தனிச் சிறப்பான நிரலாக்க மொழியின் அடிப்படையில் அமைந்துள்ள பயனாளர் இடைமுகம். வரைகலைப் பயனாளர் இடைமுகத்துக்கு மாறானது. யூனிக்ஸ், டாஸ் போன்ற இயக்க முறைமைகள் இத்தகைய இடைமுகத்தைக் கொண்டுள்ளன. ஆப்பிள் மெக்கின்டோஷ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஆகியவை வரைகலைப் பயனாளர் இடை முகத்தைக் கொண்டுள்ளன. காண்க : command line interface, graphical user interface, iconic interface. 2. நிரலர் ஒருவர் ஒரு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கும்போது அவருக்கு இயக்க முறைமை வழங்கும் செயல்கூறுகளின் தொகுதி.

programme : செயல் முறை; கட்டளைத் தொடர்; நிகழ்ச்சி நிரல்; கட்டளை நிரல்; ஆணை