பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programme, application

1172

programme creation



நிரல் : ஒரு கணினி தரவுகளைச் செய்முறைப்படுத்தும்படி செய்வதற்கான தொடர்வரிசை நிரல்கள். இது, ஒர் உயர்நிலை ஆதார வடிவில் இருக்கலாம்; இதில், இதனைக் கணினி நிறைவேற்றுவதற்கு முன்னர் ஒர் இடைநிலைச் செய்முறைப்படுத்துதல் தேவைப்படும்; அல்லது கணினியால் நேரடியாக நிறைவேற்றக்கூடிய ஒரு பொருள் வடிவமாகவும் இருக்கலாம்.

programme, application : பயன்பாட்டு நிரல்.

programme area : செயல் முறைப் பகுதி.

programme, assembly : சில்லுமொழி நிரல்.

programme, background : பின்புல நிரல்.

programme card : செயல்முறை அட்டை : குறிப்பிட்ட குறியீட்டு முறைப்படி துளையிடப்பட்டு முக்கியத் துளையீடு மற்றும் சரிபார்த்தல் எந்திரங்களின் தானியக்கச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தபடும் அட்டை.

programme chaining : செயல்முறைப் பிணைப்பு : செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதிகளின் அல்லது தகவமைவுகளின் நிறைவேற்றம் வாயிலாக நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்கிறது.

programme coding : செயல்முறைக் குறியீடிடுதல் : அறிவுறுத்தங்களை ஒரு செயல் முறைப்படுத்தும் மொழியில் எழுதும் செய்முறை.

programme, computer : கணினி நிரல்

programme control : செயல்முறைக் கட்டுப்பாடு : செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஒரு கணினி பயன்படுத்தப்படும் ஒரு பொறியமைவின் விவரிப்பு.

programme counter : செயல்முறை எண்ணி : கணினியினால் நிறைவேற்றப்பட வேண்டிய அடுத்த செயல்முறை நிரலின் அமைவிடத்தைக் குறித்துக் காட்டுகிற பதிவகம்.

programme creation : நிரல் உருவாக்கம்; நிரல் ஆக்கம் : ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப்