பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programmed label

1174



இது முக்கியமாகத் தற்கல்வி வகுப்புகளில் பயன்படுத்தப் படுகிறது.

programmed label : செயல்முறைப்படுத்திய அடையாளச் சீட்டு : வட்டு நாடாக்கோப்புகள் ஆகியவற்றை எளிதாக அடையாளங் கண்டுகொள்வதற்காகப் பெரும்பாலான செயல்முறைகளில் கோப்பின் தொடக்கத்தில் ஒரு அடையாளச் சீட்டுப் பதிவினை உருவாக்குகிற உள்ளார்ந்த வாலாயத்தைக் கொண்டிருக்கின்றன. இது புறநிலை அடையாளச் சீட்டிலிருந்து வேறுபட்டது.

programme, executive : நிரைவேற்று நிரல்.

programme file : செயல்முறைக் கோப்பு : கணினிச் செயல்முறைகள் அடங்கிய கோப்பு.

programme flowchart : செயல்முறைத் தொடர்வரிசை வரை படம் : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணக் கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய குறியீடுகள், அறிவுறுத் தக்கோடுகள். தரவுகள் அடங்கிய வரைபடம். இது பொறியமைவுத் தொடர் வரிசை வரை படத்திலிருந்து வேறுபட்டது.

programme generator : நிரல்இயற்றி : பயனாளர் தரும் சில வரன்முறைகள் மற்றும் உறவு முறைகள் அடிப்படையில் ஒரு நிரலை (வழக்கமாக, மூலக் குறிமுறையில்) உருவாக்கித் தரும் இன்னொரு நிரல். ஒரு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கும் பணியை எளிமைப் படுத்திட இதுபோன்ற நிரல் இயற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.

programme graph : செயல்முறை வரைபடம் : ஒரு செய் முறையினை வரைபடமுறையில் உருவாக்கிக் காட்டுதல்.

programme identification ID : செயல்முறை அடையாளம் : செயல்முறையை அடையாளங் கண்டு கொள்ளுதல்.

programme library : செயல்முறை நூலகம் : கிடைக்கத்தக்க கணினிச் செயல்முறைகள், வாலாயங்கள், செயல்முறைகளின் பகுதிகள் ஆகியவற்றின் தொகுதி. நூலகத்தின் தொடர்புகள் மறுபயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவை முழுமையான செயல் முறைகளாக இருப்பின், அவற்றை அப்படியே மறுபடியும் பயன்படுத்தலாம். வேலையைக் குறைப்பதற்காக செயல் முறைகளின் பகுதிகளை மற்றச் செயல்முறைகளாகப் படியெடுக்கலாம்.