பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programming aids

1178

programming librarian



வமைப்புகளை அறுதியிடுதல், நடைமுறைகளைச் சரிபார்த்தல், சேமிப்பு இடத்தை ஒதுக்கீடு செய்தல், கணினியில் செயல் முறையின் ஒட்டத்தை மேற்பார்வையிடுதல் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

programming aids : செயல்முறைப்படுத்தல் உதவிகள் : கணினி பயன்படுத்துவோருக்கு உதவுகிற கணினிச் செயல் முறைகள். எடுத்துக்காட்டு : தொகுப்பிகள்; தவறு கண்டறியும் சாதனங்கள்; பிணைப்புப் பதிப்பிகள்; கணிதத் துணை வாலாயங்கள்.

programming environment : நிரலாக்கச் சூழல்.

programming language : செயல்முறைப்படுத்தும் மொழி : கணினிச் செயல்முறைகளில் நிரல்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி. இது நூற்றுக் கணக்கில் உள்ள இவை முக்கியமாக மூன்று வகைப்படும். 1. எந்திர மொழிகள், 2. இணைப்பு மொழிகள்; 3. உயர்நிலை மொழிகள்; எந்திர மொழிகளில் கணித தருக்கமுறை அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு, நினைவக அலகு ஆகியவற்றின் வடிவளவைப் பொறுத்து நிரல் குறியீடுகளின் தொகுதி தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இந்த மொழிகளை எந்திரச்சார்பு மொழிகள் (machine depended language) என்றும் அழைப்பர். இணைப்பு மொழிகளில் நிரல்கள், தரவுகள், முகவரிகள் அனைத்தும், நினைவூட்டகங்களாகவும் குறியீடுகளாகவும் அடையாளச் சீட்டுகளாகவும் அளிக்கப்படுகின்றன. எந்திர மொழிகள், இணைப்பு மொழிகள் இரண்டும் தாழ்நிலை மொழிகள் (lowlevel language) எனப்படுகின்றன. உயர்நிலை மொழிகள் தாழ்நிலை மொழிகளைப்போல் எந்திரத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் சிக்கல் சார்புடையவனாக அமைந்துள்ளன. இதனால் சில குறிப்பிட்ட ஆங்கிலச் சொற்களையும் குறிமானங்களையும் பயன்படுத்தி நிரல்களின் வரிசை முறையினை உயர்நிலை மொழிகளில் எழுத முடிகிறது. உயர்நிலை மொழிகளில் எழுதப்படும் செயல்முறைகள் அனைத்தும் கணினியால் நிறை வேற்றப்படுவதற்கு முன்னர் எந்திரமொழியில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

programming librarian : செயல்முறைப்படுத்தும் நூலகர் : முதன்மைச் செயல்முறையாளர் குழுவைச் சேர்ந்த மூன்று