பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programming linguistics

1179

Project Gutenberg



தலையாய உறுப்பினர்களில் ஒருவர், உருவாக்க ஆதார நூலகத்தைப் பராமரித்து செயற் படுத்தி வருகிறார். குறியீடுகள் உருவாக்கம், கணினி விரை வோட்டத்தைக் கட்டுப்படுத்து தல், வெளிப்பாடுகள் அனைத் தையும் கோப்பிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவை சிலரது பணிகளில் அடங்கும்.

programming linguistics : செயல் முறைப்படுத்தும் மொழியியல் : சொற்றொடரியல், சொற்பொருளியல், செய்தித் தொடர்பியல் என்னும் ஒன்றோடொன்று இணைவுடைய மூன்று கோட்பாடுகளை ஏதேனும் இரு பொறியமைவுகளிடையே செய்தித் தொடர்புக்கான மொழிகளாக உருவாக்கப் பயன்படுத்துதல். எந்திரப் பொறியமைவு, மின்னியல் பொறியமைவு, மனிதர் தொகுதி ஆகிய மூன்றில் இரண்டிற்கிடையே செய்தித் தொடர்புக்கு இது பயன்படுகிறது.

programming team : செயல் முறைப்படுத்தும் குழு : ஒரு செயல் முறைப்படுத்தும் திட்டம் குறித்தளிக்கப்பட்டுள்ள தனியாட்களின் குழுமம்.

programming, structured : நிரல் தொடர் கட்டமைப்பு நிரலாக்கம்.

progress reporting : முன்னேற்ற அறிக்கையளிப்பு : ஒரு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது படிப்படியான அதன் நிறைவேற்றம் பற்றிய அறிக்கை.

project : திட்டப் பணி; செயல் திட்டம்; முன்னிறுத்து : 1. ஒரு குறிப்பிட்ட பணியை கணினிமயப்படுத்துவதற்கான திட்ட வரைவு. 2. தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலைச் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி. கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து குறிப்பிட்ட பண்புக்கூறுகளை (நெடுக்கைகள்) மட்டும் எடுத்து புதிதாக ஒர் அட்டவணையை உருவாக்கித் தரும்.

project control : திட்டக்கட்டுப்பாடு : ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியின் ஒரு நிலை இது. திட்டமிட்டுள்ள அட்டவணைப் பணியுடன், உள்ளபடி நிறைவேறிய பணியுடன், ஒப்பிட்டுப் பார்த்து, திட்டம் நிறைவேறு வதில் ஏற்படும் காலத் தாழ்வுகளைத் தவிர்ப்பதற்குத் தக்க திருத்த நடவடிக்கைகளை நிறை வேற்றுகிறது.

Project Gutenberg : கட்டன் பெர்க் திட்டப்பணி : இணையத்தில் பொதுக்களத்தில் பல்வேறு