பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

projecting

1180

project plan



புத்தகங்கள் கிடைக்கும்படி செய்யும் திட்டப் பணி. இந்தப் புத்தகங்களுக்கான கோப்புகள் கூடுமானவரை அதிகமான மக்கள் அணுகும்வகையில் வெளிப்படையான ஆஸ்கி எழுத்து வடிவில் இருக்கும். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தினர் இத்திட்டப் பணியை உருவாக்கியுள்ளனர். இத்திட்டப் பணியின் எஃப். டீ. பீ. தளமுகவரி : ftp : //mrcnext. cso. uinc. edu. இதன். வலைப் பக்க முகவரி : http : //www. promo. net/pg.

projecting : திட்ட வரைதல் : ஒரு முப்பரிமாண காட்சியின் இருபரிமாண வரைகலைக் காட்சி உண்டாக்குதல்.

projection : திட்ட விரிவாக்கம் : கடந்த காலப் போக்குகளை வருங்காலத்திற்கு விரிவுபடுத்துதல். இது வணிக மேலாண்மை உத்தியாகும். இதற்குக் கணினி வழங்கும் தகவல்கள் அளவற்ற பயனுடையவை.

project library : திட்ட நூலகம் : திட்டங்கள், பணிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் தரவுத் தளம். இதனை, புதிய திட்டங்களை வகுக்கும்போது மாற்றமைவு செய்து பயன்படுத்தலாம்.

project life cycle : திட்டப்பணி செயல்படுகாலச் சுழற்சி : ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதிவரையுள்ள, முன் திட்டமிடப்பட்ட பல்வேறு கட்டப் பணிகளின் வரிசைமுறைத் தொகுதி.

project management : திட்டப்பணி மேலாண்மை : ஒரு குறிப்பிட்ட திட்டப் பணியின் நடைமுறை மற்றும் செயலாக்கத்தில் திட்டமிடல், கண்காணித்தல் மற்றும் கட்டுப்பாடு ஆகிய செயல்பாடுகளைக் குறிக்கின்றது.

project management programme : திட்டப்பணி மேலாண்மை நிரல்.

project manager : திட்ட மேலாளர் : ஒரு திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாகவுள்ள ஆள். இவரைச் சில சமயம் திட்டக்குழுமத் தலைவர் என்பர்.

projector : ஒளிதரும் அலகு : கண்ணாடிகளையும் லென்ககளையும் கொண்டு ஒளியை ஒரு குறிப்பிட்ட திடகோணத்தில் செலுத்தி மிக அதிகமாக ஒளிரும் படத்தைத் தருவது.

project plan : திட்டநிலை : ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியில் ஒரு நிலை (கட்டம்). இதில், பணித் திட்டத்தின் மேம்பாடு, அமைப்பு முறை அடங்கும்.