பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

project schedule

1181

prompt



project schedule : திட்டக்கால அட்டவணை : ஒரு திட்டத்தின் ஒவ்வொரு பணியும் நடவடிக்கையும் தொடங்கும் நேரம் முடிவுறும் நேரம் பற்றிய தகவல்களைக் கொண்ட அட்டவணை.

prokey : புரோகீ : ரோஸ்சாஃப்ட் நிறுவனம் தயாரித்த பீசிக்களுக்கான விசைப்பலகை பெரு செயலகம். சொற்பகுதி வருதல் அல்லது கட்டளை வரிசையைப் பேரளவில் வரச்செய்து மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்வதை நீக்க உதவுவது.

PROLOG : புரோலாக் (ஒரு கணினி மொழி) : "செயல்முறைப் படுத்தல் தருக்கமுறை" என்று பொருள்படும் programming logic என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும்பெயர். இது "செயற்கை நுண்ணறிவில்" (Artificial Intelligence) பயன்படுத்தப்படும் ஒர் உயர்நிலைச் செயல்முறைப்படுத்தும் மொழி. இது, ஜப்பானில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

PROM : புரோம் : "செயல்முறைப் படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம்" என்று பொருள்படும். "Programmable Read Only Memory" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும்பெயர்.

promiscuous mode : ஒழுங்கினப் பாங்கு.

promiscuous-transfer : ஒழுங்கினப் பாங்கு மாற்றி : ஒரு பிணையத் தகவல் தொடர்பில், கணுக் கணினியானது, வருகின்ற தரவு பொட்டலங்கள் அனைத்தையும் அவற்றின் இலக்கு முகவரியைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொள்கிற தரவு பரிமாற்றப் பாங்கு.

prom programmer : புரோம் செயல்முறைப்படுத்தி : செயல்முறைபடுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகங்களை செயல்முறைப்படுத்துவதற்கும், அழித்திடத்தக்க செயல்முறைப்படுத்தத்தக்க, படிப்பதற்கு மட்டுமேயான நினைவகங்களை மீண்டும் செயல்முறைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் சாதனம். இது சில சமயம், "புரோம் தகளி' என்றும் அழைக்கப்படுகிறது.

prompt : நினைவுக்குறிப்பு ; தூண்டு எழுத்து ; நினைவூட்டுத் தூண்டல் : கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த