பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

protect

1184

protocol



கொண்டதாக அல்லது இன்னும் பொதுமக்களுக்கு வெளியிடப்படாததாக இருக்கும், இந்த மென்பொருளை அனுமதியின்றி எவரும் சட்டப்படிப் பயன்படுத்தவோ, படியெடுக்கவோ முடியாது. இது 'பொது முறை மென்பொருள் (Public domain Software) ' என்பதிலிருந்து வேறுபட்டது .

protect : பாதுகாத்தல் : ஒரு கணினியமைவின் செயல் முறையை அனுமதி பெறாமல் அணுகுவதைத் தடுத்தல், தீங்கு ஏற்படுவதைத் தடுக்கக் காப்பிடுதல்.

protect document : ஆவணப்பாதுகாபபு.

protected : காக்கப்பட்ட

protected memory : பாதுகாக்கப்பட்ட நினைவகம் : அழுத்தப்பட்ட நினைவகம் போன்றது. ஆனால் அதிலிருந்து வேறானது. கணித்தலில் யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்புகள் வேறு செயலகங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நினைவகத்தை அணுகுவதைத் தடுக்கின்றனர். வேறு ஒரு செயல்முறை படுத்தும் நினைவக இடத்தை எந்த ஒரு செயல்முறையும் எழுத முடியாது. டாஸ் போன்றவற்றில் இந்தக் கட்டுப்பாடு அமைப்பு இல்லை. விண் டோஸ் 95இல் இந்தச் சிக்கல் இருக்காது.

protected mode : பாதுகாக்கப்பட்ட முறை : இன்டெல் 286-கள் மற்றும் பின்னர் வந்தவைகளில் உள்ள நினைவகத்தின் அனைத்துப் பகுதிகளையும் முகவரியிட கணினியை அனுமதிக்கும் ஒரு இயக்க நிலை. ஒரு நிரல்தொடர் மற்றொன்றின் நினைவக எல்லைக்குள் செல்லாமலும் இது தடுக்கிறது. இதனால் பல நிரல் தொடர்கள் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் இயங்கமுடியும்.

protected storage : காப்பிட்ட சேமிப்பகம் : தனிவகை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சேமிப்பக அமைவிடங்கள். இது சேமிப்பதற்குப் பொருத்தமானது தானா என்பதை உறுதி செய்யும் ஒரு நடைமுறைக்கு உள்ளாகாமல் தரவுகளைச் சேமிக்க இயலாது.

protection : காப்பு.

protection, data : தரவுக்காப்பு.

protection, file : கோப்புக்காப்பு.

protocol : மரபொழுங்கு; நெறி முறை; முறையான நடைமுறைகள்; விதி முறைத் தொகுப்பு : கணினியமைவுகளிடையே தகவல் பரிமாற்றம் பற்றிய விதி