பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

psychology

1187

public domain software


psychology : உளவியல் ;மனவியல் .

p-system : பி-பொறியமைவு : ஒரு நுண்கணினிச் செயற்பாட்டுப் பொறியமைவு. பல்வேறு எந்திரங்களில் பயன்படுத்தும் வகையில் இதில் செயல்முறைகளை எழுதலாம். இது, இந்தப் பொறியமைவின் முக்கிய நன்மையாகும். இது, பி-குறியீட்டினை ஒரு குறிப்பிட்ட கணினிக்குப் பொருத்தமான எந்திரமொழியில் மொழி பெயர்க்கிறது.

. pt : . பீடீ : ஒர் இணைய தள முகவரி போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

publication language : வெளியீட்டு மொழி : நூல் வெளியீடுகளுக்குப் பொருத்தமான நன்கு வரையறுக்கப்பட்டுள்ள ஒரு செயல்முறைப்படுத்தும் மொழி இன்றியமையாத தேவை. ஏனென்றால் சில மொழிகளில் பொதுவான எழுத்து முகப்புகளாக இல்லாத தனிவகை எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

public broadcasting : பொது ஒலி பரப்பு.

public data network : பொதுத்தரவுப் பிணையம்.

public directory : பொதுக்கோப்பகம் : ஒரு எஃப். டீ. பீ வழங்கனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பகம். பெயரிலாப் பயனாளர்கள் (anonymous users) கோப்புகளைப் பெறவும் தரவும் இதனை அணுக முடியும். சுருக்கமாக pub என அழைக்கப்படும்.

public domain : பொதுக்களம் : பதிப்புரிமை அல்லது பிற சொத்துரிமைப் பாதுகாப்பின் கீழ் வராத புத்தகங்கள், இசை அல்லது மென்பொருள் போன்ற படைப்பாக்கத்தின் தொகுதியைக் குறிக்கிறது. பொதுக் களத்தில் இருக்கும் படைப்புகளை இலவசமாக நகலெடுக்கலாம். திருத்தலாம். எந்தப் பயனுக்காகவும் எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இணையத்தில் கிடைக்கும் தரவுகளில் பெரும்பாலானவையும், உரைகள் மற்றும் மென்பொருள் பலவும் பொதுக்களத் தின் கீழேதான் உள்ளன. ஆனால் பதிப்புரிமை பெற்ற படைப்புகள் இணையத்தில் பொதுக்களத்தில் இடம் பெறுவதில்லை.

public domain software : பொது முறை மென்பொருள் :

1. பதிப்புரிமைச் சட்டங்களின் பாதுகாப்புக்கு உட்படாமலிருப்