பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

autostart routine

118

auxilliary function


வசதியை விளக்கும் சொல் Turnkey.

autostart routine : தானே தொடங்கும் நிரல்கூறு  : கணினியில் அமைக்கப்பட்ட நிரல்கள் கணினியை இயக்கத் தொடங்கியவுடன் தாமே செயல்படத் துவங்கும். கணினி நினைவகத்தைச் சோதித்தல் போன்ற கண்டறி சோதனைகளை நடத்தி, இயக்க முறைமையை ஏற்றி கட்டுப்பாட்டை அதற்குக் கொடுக்கும்.

auto run : உடனடிக் கூட்டல்.

auto text : உடனடி உரை

autotrace : தானியங்கு எல்லை வரைவு; தானியங்கு ஒரம் வரைதல் : படவரைவு நிரல்களிலுள்ள ஒரு வசதி. ஒரு துண்மிப்பட (பிட் மேப்) உருவப்படத்தை ஒரு பொருள்-நோக்கு (object-oriented) படமாக மாற்ற அதன் ஓரங்களில் கோடு வரைகிறது.

Α/UΧ : ஏ/யூஎக்ஸ் : பல் பயனாளர், பல்பணி யூனிக்ஸ் இயக்க முறைமையின் ஒரு வடிவம். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் படைப்பு. ஏடி&டி யூனிக்ஸ் சிஸ்டம்V வெளியீடு 2. 2 இயக்க முறைமையை அடியொற்றி உருவாக்கப்பட்டது. பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. மெக்கின்டோஷின் பல்வேறு சிறப்புக்கூறுகளும் ஏ/யூஎக்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மெக்கின் டோஷ் டூல்பாக்ஸ் வசதி இதில் உண்டு. இதன்மூலம், பயனாளர்கள், வரைகலைப் பணிச்சூழலை (Graphical User Interface) பெறமுடியும் .

AUX : ஏயூஎக்ஸ் : கணினித் துணைச் சாதனங்களுக்குரிய தருக்கமுறைச் சாதனப் பெயர். எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான துணைச் சாதனத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர். பெரும்பாலும் இப்பெயர் கணினியின் முதல் தொடரியல் துறைக் குறிக்கும் காம் (COM1) என்றும் இதனை அழைப்பர்.

auxiliary equipment : துணை நிலைச் சாதனம் : மையச் செயலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத கருவி.

auxiliary function : துணை நிலைச் செயல் : தானியங்கு எந்திரக் கருவிக் கட்டுப்பாட்டில், செயல்படு கருவி ஒன்றின் வேகக் கட்டுப்பாடு அல்லது எந்திரத்தின் வெட்டுக் கருவியின் கட்டுப்பாடு நீங்கலாக பிற