பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

punch, x

1192

push-pop stack


punch, x : எக்ஸ் -துளை .

punch, y : ஒய் -துளை .

punctuation syntials : நிறுத்தக்குறி, பகுப்பாய்வு.

punctuator : நிறுத்தக்குறிகள்.

purchase order : கொள்முதல் கோரிக்கை

pure procedure : தூய முறை : நிறைவேற்றத்தின் போது தனது எந்த பகுதியையும் மாற்றமைவு செய்து கொள்ளாத நடைமுறை.

purge அழிப்பு : ஒரு கோப்பினை அழித்து விடுதல்.

purge print document : அச்சு ஆவணங்களை நீக்கு.

purpose computer, general : பொதுப்பயன் கணினி.

purpose computer, special : சிறப்புப்பயன் கணினி

push : தள்ளு : ஒரு செயல் முறை அடுக்கின் உச்சி அமைவிடத்தினுள் தரவுவைத் தள்ளிச் செலுத்துதல். அடுக்கின் சுட்டு முள், அடுக்கின் உச்சிக்கு வருகிற அடுத்த அமைவிடத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் தானாகவே உயர்ந்து விடுகிறது. இது "விரைவுத் தள்ளல்" (Pop) என்பதிலிருந்து வேறுபட்டது.

push instruction : தள்ளு நிரல் : தள்ளும் செயற்பாட்டினை நிறைவேற்றுகிற கணினி நிரல்.

pushdown list : கீழ்த்தள்ளுப்பட்டியல் . கீழிருந்து மேல் நோக்கி எழுதப்படும் பட்டியல். இதில் ஒவ்வொரு புதிய பதிவும் பட்டியலின் உச்சியில் இடம் பெறும். பட்டியலின் உச்சியிலுள்ள இனம் முதலில் செய்முறைப்படுத்தப்படும்.

pushdown stack : கீழ்த்தள்ளுஅடுக்கு : கணினியில் ஒரு கீழ்த் தள்ளுப்பட்டியலை நிறை வேற்றுகிற நினைவக அமைவிடங்களின் அல்லது பதிவேடுகளின் தொகுதி.

push pop stack : விரைவுக் கீழ்த் தள்ளு அடுக்கு : ஒரு செயல் முறை முகப்பிலிருந்து தகவல்களைப் பெற்று, நிரல்களின் முகவரி அமைவிடங்களை "முதலில் கடைசி வெளிப்பாடு" அடிப்படையில் சேமித்து வைக்கிற பதிவேடு. இரு செயற்பாடுகளும் அடுக்குச் செய்முறைப்படுத்துதலில்

அடங்கியவை. தள்ளுதல் என்பது பதிவேடுகளிலிருந்து அடுக்கினை நிரப்புவதைக் குறிக்கிறது. விரைவுத் தள்ளுதல் என்பது பதிவேடுகளிலிருந்து அடுக்கினை நிரப்புவதைக் குறிக்கிறது;